Aditya L1 Captures Images Of Sun : விண்கலம் எடுத்த சூரியனின் புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது

Aditya L1 Captures Images Of Sun :

சூரியனை ஆய்வு செய்வதற்காக விண்வெளியில் பயணித்துக்கொண்டிருக்கும் ஆதித்யா எல்.1 விண்கலம் எடுத்த சூரியனின் புதிய புகைப்படங்களை (Aditya L1 Captures Images Of Sun) இஸ்ரோ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. நிலவின் தென் துருவத்தை தொட்டுவிட்ட சந்திரயான் – 3 விண்கலத்தின் சாதனையைத் தொடர்ந்து அடுத்த சாதனையை படைக்க இந்தியா சூரியனின் மேற்பரப்பு பகுதியை ஆய்வு செய்ய ஆதித்யா எல்-1 என்ற விண்கலம் கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி (02.09.2023) காலை 11.50 மணிக்கு  ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து PSLV C57 ராக்கெட் மூலம் ஆதித்யா எல்1 விண்கலம் ஏவப்பட்டது.

பலகட்ட பயணங்களை மேற்கொண்டு வெற்றிகரமாக பயணித்து வரும் ADITYA  L1 விண்கலம் சமீபத்தில் இந்த விண்கலத்தின் 2வது ஆய்வுக்கருவி செயல்பாட்டுக்கு வந்ததாக இஸ்ரோ அறிவித்திருந்தது. இந்நிலையில்  விண்கலத்தின் (SUIT) கருவி எடுத்த சூரியனின் புகைப்படங்களை (Aditya L1 Captures Images Of Sun) இன்று  Indian Space Research Organisation (ISRO) வெளியிட்டுள்ளது. சூரிய வெப்பத்தில் இருந்து வெளிவரும் புற ஊதாக்கதிர்களின் அலைநீளங்களை முதல்முறையாக ஆதித்யா எல்.1 படம்பிடித்து (Aditya L1 Captures Images Of Sun) அனுப்பியுள்ளது.

சூரியனைச் சுற்றி இருக்கும் ஒலி கோளம் மற்றும் ‘குரோமோச்பியர்’ மண்டலத்தை வெவ்வேறு அலைநீளத்தில் எடுத்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.  மேலும் 200 முதல் 400 நானோ மீட்டர் வரையிலான சூரிய புற ஊதா கதிர்களின் வட்ட அலை நீளங்களையும் படம் எடுத்து அனுப்பியுள்ளது. இந்த புகைப்படங்கள் (Aditya L1 Captures Images Of Sun) சூரியனை பற்றிய பல ஆராய்ச்சிக்கு பெரிதும் உதவுமென இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Latest Slideshows

Leave a Reply