Aditya L1 In Halo Orbit : சூரியனின் 'லெக்ராஞ்சியன்' புள்ளியில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது

Aditya L1 In Halo Orbit :

சூரியனின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் (இஸ்ரோ)   கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி 2023 அன்று ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ஆதித்யா எல் 1 என்ற விண்கலத்தை அனுப்பியது. இந்த ஆதித்யா எல் 1 விண்கலம் பூமியில் இருந்து 127 நாட்கள் பயணித்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில் சூரியனுக்கு மிக அருகில் உள்ள எல் 1 எனப்படும் ‘லெக்ராஞ்சியன் புள்ளியில் வெற்றிகரமாக நிலை (Aditya L1 In Halo Orbit) நிறுத்தப்பட்டுள்ளது. L1 என்பது பூமி மற்றும் சூரியன் அமைப்பில் உள்ள ஐந்து இடங்களில் ஒன்றாகும். லெக்ராஞ்சியன் புள்ளி என்பது பூமி மற்றும் சூரியனின் ஈர்ப்பு விசைகள் ஒன்றையொன்று விலக்கும் இடமாகும். ஒரு விண்கலம் நிலைநிறுத்தப்படுவதற்கும் சூரியனைக் கவனிப்பதற்கும் இது ஒப்பீட்டளவில் நிலையான (Aditya L1 In Halo Orbit) புள்ளியாகும்.

அடுத்த 5 ஆண்டுகளுக்கு எல் 1 என்ற புள்ளியில் இருந்தப்படிதான் ஆதித்யா L1 விண்கலம் சூரியனின் மேற்பரப்பு குறித்து ஆய்வு செய்ய உள்ளது. இந்த  விண்கலத்தில் 7 வகை கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. சூரியனின் நேர் மற்றும் எதிர் திசையில் 4 கருவிகள் நிலை (Aditya L1 In Halo Orbit) நிறுத்தப்பட்டுள்ளன. எல் 1ஓஎஸ், ஏபெக்ஸ் சூட் ஆகிய கருவிகள் சூரியனை நோக்கி பயணிக்க தனது செயல்பாடுகளை தொடங்கிவிட்டன. சூரியனில் ஏற்படும் மாற்றங்களை மற்ற கருவிகள் ஆய்வு செய்யும். L1 புள்ளியில் (Aditya L1 In Halo Orbit) ஆதித்யா விண்கலம் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதை தொடர்ந்து அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா ஆகிய நாடுகளை தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்யும் 4-வது நாடு என்ற பெருமையை நம் இந்தியா பெற்றுள்ளது.

'இன்னொரு மைல்கல்’ என பிரதமர் மோடி புகழாரம் :

“இந்தியாவின் முதல் சூரிய ஆய்வு விண்கலமான Aditya L1 அதன் இலக்கை 9Aditya L1 In Halo Orbit) அடைந்துள்ளது. மிகவும் சிக்கலான மற்றும் கடினமான விண்வெளிப் பயணங்களை உணர்ந்து கொள்வதில் நமது விஞ்ஞானிகளின் இடைவிடாத அர்ப்பணிப்புக்கு இது ஒரு முக்கிய சான்றாகும். இந்த அசாதாரண சாதனையை நாட்டு மக்களுடன் இணைந்து பாராட்டுகிறேன். மனிதகுலத்தின் நலனுக்காக அறிவியலின் புதிய எல்லைகளைத் தொடர்ந்து தொடருவோம்” என்று தனது எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி  பதிவிட்டுள்ளார்.

ஆதித்யா-எல்1 அதன் இலக்கு சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது குறித்து பேசிய இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத் ‘இன்று நாம் அடைந்திருக்கும் இந்த வெற்றி  நமது அளவீடு மற்றும் வேகத் தேவையின் சரியான கணிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் சரியான இடத்தைப் பெற்றுள்ளது. இப்போது எங்கள் கணக்கீட்டில் அது சரியான இடத்தில் உள்ளது ஆனால் அது சரியான இடத்தில் உள்ளதா என்பதைப் பார்க்க இன்னும்  சில மணிநேரங்களுக்கு நாங்கள் அதை கண்காணிக்கப் போகிறோம்’ என்று கூறினார்.

Latest Slideshows

Leave a Reply