Aditya L1 Mission: சூரியனை ஆய்வு செய்ய விண்ணில் பாய்கிறது ஆதித்யா எல் 1

சூரியனின் ரகசியங்களை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 -ஐ (Aditya L1 Mission) செப்டம்பர் 2 ஆம் தேதி அனுப்ப (ISRO ) திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்திரயான்-3 -இன் வெற்றியானது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (ISRO) உற்சாகத்தை அதிகரித்துள்ளது. இது இந்தியாவின் எதிர்கால நோக்கங்களான இப்போது நிலவுக்கு அப்பால் விரிவடைந்துள்ளன. எனினும், இதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன.

Aditya L1 Mission சூரிய ஆய்வு

சூரியனின் ரகசியங்களை அறிய இந்திய விஞ்ஞானிகள் தற்போது தயாராகி வருகின்றனர். இதற்காக இஸ்ரோ விரைவில் ஆதித்யா எல்-1 (Aditya L1) என்ற செயற்கைகோளை விண்ணில் செலுத்த உள்ளது. சூரியனின் ரகசியங்களை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 -ஐ (Aditya L1 Mission) வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி காலை 11.45 மணிக்கு ஆதித்யா விண்கலம் விண்ணில் பாய்கிறது.

இந்த விண்கலமானது, இரண்டு வாரங்களுக்கு முன், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்துக்கு கொண்டு வரப்பட்டது. இந்த விண்கலம் நான்கு மாதங்கள் பயணித்து, பூமியிலிருந்து 15 லட்சம் கி.மீ., தொலைவில் உள்ள, ‘எல் 1’ என்ற மையப்புள்ளியில் நிலை நிறுத்தப்படும். ஆதித்யா விண்கலம், எல் 1 (Aditya L1 Mission) என்ற பகுதியிலிருந்து, சூரியனை ஆய்வு செய்யும்.

இந்த விண்கலம் 1,475 கிலோ எடை கொண்டது. பூமியில் இருந்து சுமார் 1.5 மில்லியன் கி.மீட்டர் தொலைவு கொண்ட சூரியனின் “லெக்ராஞ்சியன்” புள்ளி 1-ல் நிலைநிறுத்தப்பட உள்ளது. இந்த விண்கலம் மூலம் சூரிய புயல்கள், பூமியில் ஏற்படும் மாற்றங்கள், குரோமோஸ்பியர் மற்றும் ஒளிக்கோளம் ஆகியவற்றை ஆய்வு செய்து பூமிக்கு தகவல்களை பெற முடியும்.

மேலும் சூரியனின் வெளி அடுக்கு மற்றும் அருகாமையில் இருக்கும் புற ஊதாக்கதிர்களை ஆய்வு செய்வதே இதன் முக்கிய நோக்கமாகும். இந்த விண்கலமானது லெக்ராஞ்சியன் முதல் புள்ளியில் நிலை நிறுத்தப்படுவதன் மூலம் நாம் பூமியில் இருந்து சூரியனை தொடர்ந்து கண்காணிக்க முடியும் என
(ISRO) விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கு சூரியனுக்கு விண்கலம் அனுப்புவது மிகவும் சவாலாகவே இருந்து வருகிறது. குறிப்பாக பூமியில் இருந்து சூரியனின் தூரமானது 1 49 மில்லியன் கி.மீட்டராக உள்ளது. ஆனால் நிலவு பூமியில் இருந்து வெறும் 3.84 லட்சம் கி.மீட்டர் தூரம் மட்டுமே. 2-வது காரணம், சூரியனின் வளிமண்டலத்தில் இருக்கும் அதீத வெப்ப நிலையும், கதிர்வீச்சும். இந்த சவால்களை கடந்து இஸ்ரோ வரும் ஜனவரி மாதம் சாதனை படைக்கும் என நம் இந்திய தேசமே எதிர்பார்த்து கிடக்கிறது.

பூமியை நோக்கி வரும் சூரிய புயல்களை அறிந்து கொள்ளவும், அதன் தாக்கத்தை தணிக்கவும் தொடர்ச்சியாக சூரியன் குறித்த ஆய்வுகளை இஸ்ரோ மேற்கொள்ள உள்ளது. இதற்கான முழு ஏற்பாடுகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் தற்போது செய்துள்ளனர்.

Latest Slideshows

Leave a Reply