Aditya L1 Spacecraft : சுற்று வட்டப்பாதை உயரம் 4-வது முறையாக அதிகரிப்பு

சூரியனின் மேற்பரப்பை பற்றி விரிவாக ஆய்வு செய்ய ‘ஆதித்யா எல்1’ விண்கலத்தை (Aditya L1 Spacecraft) PSLV-C 57 ராக்கெட் உதவியுடன் இஸ்ரோ கடந்த செப்.2 புவியின் சுற்றுவட்டப் பாதையை நோக்கி வெற்றிகரமாக புறப்பட்டது. புறப்பட்ட 1 மணி நேரம் 3 நிமிடங்களில் ராக்கெட்டில் இருந்து Aditiya எல்-1 விண்கலம் (Aditya L1 Spacecraft) வெற்றிகரமாக பிரிந்தது.

ஆதித்யா L1 விண்கலம் (Aditya L1 Spacecraft) நான்கு மாதங்கள் பயணம் செய்து பூமியில் இருந்து 15 லட்சம் கிலோ மீட்டர் துாரம் உள்ள “லாக்ரேஞ்ச் பாயின்ட் எல்1” என்ற இடத்தில் நிலை நிறுத்தப்பட்டு அங்கிருந்தபடி சூரியனை ஆய்வு செய்யும். சூரியனுக்க்கும், பூமிக்கும் இடையிலான துரமானது 15 கோடி கிலோ மீட்டர். இந்நிலையில் புவிவட்டப்பாதையில் தனது பயணத்தை தொடங்கிய Aditiya எல்-1 விண்கலத்தின் உயரம் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவியின் சுற்று வட்டப்பாதையின் உயரம் 3 முறை அதிகரிக்கப்பட்டுள்ளது.

Aditya L1 Spacecraft - சுற்று வட்டப்பாதை உயரம் 4-வது முறையாக அதிகரிப்பு :

இது தொடர்பாக இஸ்ரோ வெளியிட்ட அறிக்கை: Aditiya-L1 விண்கலத்தின் புவியின் சுற்று வட்டப்பாதையின் உயரமானது இன்று அதிகாலை 2.15 மணியளவில் 4வது முறையாக வெற்றிகரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு மற்றும் அந்தமானின் போர்ட் பிளேரில் உள்ள இஸ்ரோவின் தரை நிலையங்கள் இந்த செயல்பாட்டின் போது செயற்கைக்கோளைக் முழுவதுமாக கண்காணித்தன. தற்போது விண்கலமானது பூமியிலிருந்து 256 KM x 121973 KM தொலைவில் உள்ளது. அடுத்த சுற்றுவட்டப்பாதை உயரம் அதிகரிப்பு செப்டம்பர் மாதம் 19ம் தேதி அதிகாலை 02:00 மணிக்கு நடக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Latest Slideshows

Leave a Reply