Aditya L1 Updates : 3-வது முறையாக விண்கலத்தின் புவி சுற்று வட்டப்பாதை உயரம் அதிகரிப்பு

Aditya L1 Updates : ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்று வட்டப்பாதையின் உயரம் 3-வது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ (ISRO) தெரிவித்துள்ளது. Aditya L1 என்பது சூரியனின் மேற்பரப்பு வளிமண்டலத்தை ஆய்வு செய்வதற்காகத் இஸ்ரோவின் திட்டமிடப்பட்ட சூரியப்புறணி வரைவி விண்கலமாகும்.

ADITYA L-1 விண்ணில் செலுத்தப்படுதல் :

ADITYA L-1 விண்கலமானது கடந்த செப் 2-ம் தேதி காலை 11.50 மணிக்கு PSLV C-57 ராக்கெட்டானது தீப்பிழம்பை கக்கியப்படி, 1,480 கிலோ எடை கொண்ட “ஆதித்யா எல்-1” விண்கலத்தை சுமந்து கொண்டு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. பூமியில் இருந்து புறப்பட்டு 1 மணி நேரம் 3 நிமிடங்களில் PSLV C-57 ராக்கெட்டில் இருந்து ‘ஆதித்யா எல்1’ விண்கலமானது வெற்றிகரமாக பிரிந்து சென்றது. பின்னர் புவியின் சுற்று வட்டப்பாதையில் தனது ஆய்வு பயணத்தை விண்கலம் தொடர்ந்து வருகிறது.

பிறகு கடந்த 5-ஆம் தேதி ADITYA L-1 விண்கலத்தின் புவி சுற்று வட்டப்பாதையின் உயரம் 2-வது முறையாக அதிகரிக்கப்பட்டது. 282 KM x 40,225 KM சுற்றுவட்டப்பாதையில் ஆதித்யா விண்கலம் சுற்றி வந்தது. அதனை தொடர்ந்து விண்கலத்தை அடுத்த சுற்றுவட்டப்பாதைக்கு உயர்த்தும் நடவடிக்கையை இஸ்ரோ நிறுவனம் முயற்சி செய்து வந்தது.

Aditya L1 Updates - 3வது முறையாக புவி சுற்று வட்டப்பாதை உயரம் அதிகரிப்பு :

இந்நிலையில் ADITYA L-1 விண்கலத்தின் புவி சுற்று வட்டப்பாதை உயரம் 3-வது முறையாக வெற்றிகரமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக (Aditya L1 Updates) இஸ்ரோ தற்போது தெரிவித்துள்ளது. இஸ்ரோ நிறுவனம் தனது எக்ஸ் X வலைதளத்தில், “ஆதித்யா-எல்1 மிஷன்” புவி சுற்று வட்டப்பாதையின் உயரமானது 3-வது முறையாக பெங்களூரு ISTRAC-லிருந்து வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. மொரீஷியஸ் மற்றும் பெங்களூரு, (SDSC – SHAR) மற்றும் அந்தமனின் போர்ட் பிளேரில் உள்ள இஸ்ரோவின் தரை நிலையங்கள் இத்தகைய செயல்பாட்டின் போது செயற்கைக்கோளைக் முழுவதும் கண்காணித்தன. ADITYA L-1 புதிய சுற்றுப்பாதையை அடைந்தது. 296 KM x 71767 KM ஆகும். அடுத்த புவி சுற்று வட்டப்பாதை 4-வது உயரம் அதிகரிப்பு (EBN#4) வரும் செப்டம்பர் 15-ஆம் தேதியன்று மதியம் 02:00 மணி IST இல் திட்டமிடப்பட்டுள்ளது. என்று இஸ்ரோ நிறுவனம் அதில் பதிவிடப்பட்டுள்ளது.

Latest Slideshows

Leave a Reply