Aditya L1 செயற்கைக் கோளின் 'ஸ்விஸ்' கருவி விண்ணில் ஆய்வு

Aditya L1 செயற்கைக் கோளின் 'ஸ்விஸ்' கருவி :

‘ஸ்விஸ்’ கருவி எனப்படும் சோலார் விண்ட் அயன் ஸ்பெக்ட்ரோமீட்டர் Solar Wind Ion Spectrometer (SWIS) சூரியக் காற்றின் துகள்களை ஆய்வு செய்யும்  பணியைத் தொடங்கியுள்ளது. சூரியனின் மேற்பரப்பின் வெளிப்புறப் பகுதியை ஆய்வு செய்வதற்காக Aditya L1 என்ற இந்தியாவின் முதல் சூரிய செயற்கைக் கோள் கடந்த செப்டம்பர் மாதம் விண்ணில் செலுத்தப்பட்டது. சுமார் 15 லட்சம் கி.மீ தூரம் கடந்து சென்று “லாக்ராஞ்சியன் பாயின்ட் ஒன்” என்ற பகுதியை அடைந்து விண்கலம் அங்கு நிலைநிறுத்தப்பட்டு ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ திட்டமிட்டது. இந்நிலையில் பணியில் அடுத்த கட்டமாக இஸ்ரோ விண்கலத்தில் (Aditya L1) இருக்கும் ‘ஸ்விஸ்’ கருவியை ஆக்டிவேட் செய்து அதன் பணியைத் தொடங்கியுள்ளது. ASPEX-யில் இரண்டு கருவிகளைக் கொண்டுள்ளது. சோலார் விண்ட் அயன் ஸ்பெக்ட்ரோமீட்டர் (SWIS) மற்றும் சூப்பர் தெர்மல் எனர்ஜிடிக் பார்ட்டிகல் ஸ்பெக்ட்ரோமீட்டர் (STEPS) ஆகியவை உள்ளன.

இதில் ஸ்விஸ் கருவி கடந்த சனிக்கிழமை முதல் ஆய்வு பணியைத் தொடங்கியுள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தெரிவித்துள்ளது. எற்கனவே STEPS கருவி கடந்த செப்.10-ம் தேதி முதல் செயல்படத் தொடங்கிய நிலையில் தற்போது  ‘ஸ்விஸ்’ கருவி கடந்த நவ.2-ம் தேதி ஆக்டிவேட் செய்யப்பட்டு தற்போது செயல்படத் தொடங்கியுள்ளதாக இஸ்ரோ கூறியது. இதுகுறித்து இஸ்ரோ மேலும் கூறுகையில் “ஸ்விஸ் கருவியானது 360 டிகிரி பார்வை கொண்ட இரண்டு சென்சார் அலகுகளைப் பயன்படுத்தி ஒன்றுக்கொன்று செங்குத்தாக இயங்குகிறது. இந்த கருவியானது சூரிய காற்றின் முதன்மையான அயனிகளான புரோட்டான்கள் மற்றும் ஆல்பா துகள்களை வெற்றிகரமாக அளவிட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply