Adiyae Movie Trailer : ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் அடியே படத்தின் டிரைலர் வெளியீடு...

Adiyae Movie Trailer :

ஜி.வி.பிரகாஷ், கௌரி கிஷன் இணைந்து நடித்துள்ள படம் ‘அடியே’ ஆகும். இப்படத்தை விக்னேஷ் கார்த்திக் இயக்கியுள்ளார். இயக்குனர் வெங்கட் பிரபு, மதுமகேஷ், ஆர்.ஜே.விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மாலி அண்ட் மான்வி மூவி மேக்கர்ஸ் சார்பில் பிரபா பிரேம்குமார் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

வரும் 25ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் மிஷ்கின், வெங்கட் பிரபு, வசந்தபாலன், சிம்புதேவன், ஏ.எல்.விஜய், ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் ஜி.வி.பிரகாஷ் பேசியதாவது: ‘அடியே’ ஒரு காதல் கதையாகும். அதுவே ஒரு சவாலாக இருந்தது. திடீரென்று ‘சென்னையில் மழை பெய்யும், கார்கள் பறக்கும்’ என்பார். “இதை எப்படி காட்சிப்படுத்துவீர்கள் என்று இயக்குனரிடம் கேட்டேன். ஆனால் அதை சிறப்பாக கொண்டு வந்துள்ளார். புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளோம். ரசிகர்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார். இந்நிலையில் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள யோகன் முதல் பாகம் படத்தின் 150-வது வெற்றி விழாவிற்கு இந்திய பிரதமர் விஜயகாந்த் செல்கிறார் என்று தொடங்குகிறது Adiyae Movie Trailer. இந்த வசனமே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இது வீடியோவை பார்க்கும் ஆர்வத்தை அதிகரிக்கிறது. ‘மெட்ராஸ் பருவ பனிப்பொழிவு வழக்கத்தை விட முன்னதாகவே துடங்கி உள்ளது’ என்ற அடுத்த வசனமும் சுவாரஸ்யமாக உள்ளது. இவருதான் மியூசிக் டைரக்டர் பயில்வான் ரங்கநாதன் 2 ஆஸ்கர் வாங்கிருக்காரு ‘கோமாளி படத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறாரா?’, ‘விக்ரம்’ படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரம், மிஷ்கினின் ‘பொறுக்கி பய சார்’, போன்ற வசனங்களும் ‘மயக்கம் என்ன’, ‘மாநாடு’ படக் குறிப்புகள் ஏராளமான கதைகள் டிரைலரில் சொல்லப்பட்டுள்ளது. டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Latest Slideshows

Leave a Reply