முதலமைச்சர் MK Stalin இன்று Adyar U Turn Bridge-ஐ திறந்து வைத்தார்

Adyar U Turn Bridge :

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையின் முதல் U-வடிவ (Adyar U Turn Bridge) மேம்பாலத்தை திறந்து வைத்தார்

போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் ஆனது தொடங்கப்பட்டது :

Adyar U Turn Bridge : கடந்த 2021-ம் ஆண்டு OMRன் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் மத்திய கைலாஷ், இந்திரா நகர் சந்திப்பு, துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் ஆனது தொடங்கப்பட்டது. U – வடிவ மேம்பாலம் ஆனது மத்திய கைலாஷ் பகுதியில் ‘L’ வடிவதிலும் மற்றும் OMR, இந்திரா நகர் சந்திப்பு, டைடல் பார்க் பகுதியில் ‘U’ வடிவத்திலும் வடிவமைக்கப்பட்டு மேம்பால கட்டிட பணியானது நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்திரா நகர் சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள ‘U’ வடிவ மேம்பாலத்தின் கட்டிட பணியானது நிறைவு பெற்றுள்ளதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலமாக இன்று U – வடிவ மேம்பாலத்தை (Adyar U Turn Bridge) திறந்து வைத்தார். சோழிங்கநல்லூரில் இருந்து திருவான்மியூர் செல்லும் வாகனங்கள் இந்து U – வடிவ மேம்பாலத்தை பயன்படுத்தி டைடல் பார்க் சந்திப்பில் போக்குவரத்து சிக்னலுக்காக காத்திருக்காமல் இந்திரா நகர் மேம்பாலம் வழியாக ஏறி ‘U Turn’ செய்து இந்திரா நகர், அடையாறு மற்றும் திருவான்மியூர் செல்ல முடியும். இந்த பாலத்தின் இருபுறமும் 120 மீட்டர் நீள அணுகு சாலை ஆனது அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் சந்திப்பில் உள்ள சிக்னலை கடக்க  முன்பு குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டும். ஆனால் தற்போது மேம்பாலம் கட்டப்பட்டுள்ளதால் வாகனங்களில் செல்பவர்கள் எளிதாக அந்த சிக்னலை கடந்து செல்ல முடியும்.

இது தமிழ்நாட்டில் U Turn அமைப்புடன் கட்டப்பட்டுள்ள முதல் மேம்பாலம் ஆகும் :

இந்த மேம்பாலம் ஆனது 450 மீட்டர் நீளம் 4 மற்றும் 25 அடி அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ‘U’ வடிவ மேம்பாலத்தில் 40 அடி இடைவெளியில், 20 தூண்கள் உள்ளது. இந்த மேம்பாலம் அமைக்கும் பணிகளின் போது இடையூறாக அங்கு இருந்த மரங்கள் ஆனது வேரோடு பிடுங்கப்பட்டு, அருகில் உள்ள மத்திய பாலிடெக்னிக் வளாகம் மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் நடப்பட்டுள்ளது.

Latest Slideshows

Leave a Reply