AePS : புதிய சேவை - ATM நம்மை தேடி வரும், ATM-க்கு நாம் போக தேவையில்லை

ATM சென்று அவசர தேவைக்கு பணம் எடுக்க நேரமில்லாத போது மற்றும்  சூழ்நிலை   இல்லாத போது தேவைப்படும் பணம் எடுக்க நம் வீட்டுக்கே ஏடிஎம் வந்தால் எப்படியிருக்கும். இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி (IPPB)-தான் இப்படிப்பட்ட சேவையை வழங்குகிறது. இந்த சிறந்த சேவை இருப்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பே  இல்லை. மக்கள் நலனுக்காகப் அரசு இப்படிப்பட்ட பல சிறப்புத் திட்டங்களை உருவாக்கினாலும் அது மக்களிடையே செல்லாமல் இருக்கின்றது. இப்படிப்பட்ட பல சிறப்புத் திட்டங்களில் முக்கியமான ஒன்று தான் இந்த ஆன்லைன் ஆதார் ஏடிஎம் (AePS) சேவை ஆகும். நாம் இப்படிப்பட்ட சிறப்புச் சேவையைப் பயன்படுத்தி நம் வீட்டிலிருந்தே பணத்தைப் பெறலாம்.

ஆதார் ஏடிஎம் (AePS - Aadhaar Enabled Payment System)

Aadhaar Enabled Payment System – AePS என்பது ஆதார் இயக்கப்பட்ட பணம் செலுத்தும் முறை ஆகும்.  AePS மூலம் ஒரு தனிநபர் தனது ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட கணக்கிலிருந்து Biometric தரவுகளைப் பயன்படுத்தி பணத்தை எடுக்க அல்லது பணம் செலுத்தும் வசதி உள்ளது. ஒரு தனிநபர் ATM அல்லது Bank-க்குச் செல்ல வேண்டிய அவசியமின்றி, AePS மூலம் குறைந்த அளவிலான பணத்தை எடுத்துக்கொள்ள முடியும். இந்த சிறந்த AePS சேவை மூலம் நேரத்தை மிச்சப்படுத்துவது மட்டும் அல்லாமல்  ATM  இல்லாத இடத்தில் மக்களுக்கு ரொக்க பண தேவையைப் பூர்த்தி செய்ய முடியும்.

இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி (IPPB), X சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள செய்தி

இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி (IPPB), X சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட செய்தியில், “அவசர தேவைக்குப் பணம் எடுக்க வங்கிக்குச் செல்ல நேரமில்லையா? கவலை வேண்டாம். மக்கள் IPPB ஆன்லைன் AePS (ஆதார் ஏடிஎம் ஏஇபிஎஸ்) சேவையைப் பயன்படுத்தி தங்கள் வீட்டிலிருந்தே பணத்தைப் பெறலாம்.  நம் தபால் நிலைய ஊழியர் இப்போது நமது வீட்டு வாசலிலேயே பணத்தைப் பெற உதவுகிறார். இதை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என்று தெரிவித்துள்ளது.

Business Correspondent - BC

ஒவ்வொரு தபால் அலுவலகத்திற்கும் வணிகர் தூதர் (Business Correspondent – BC) என்ற பதவியில் ஒருவர் AePS திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்டு இருப்பார். AePS திட்டம் ஆனது இவரின்  (Business Correspondent – BC) தலைமையில் அல்லது இவரின் உதவியால்தான் செயல்படுத்தப்படுகிறது. நேஷ்னல் பேமெண்ட்ஸ் கார்ப்ரேஷன் ஆப் இந்தியா (NPCI) அளித்துள்ள  விளக்கத்தின்படி, இந்த வணிகர் தூதர் (Business Correspondent – BC) என்பவர் அங்கீகரிக்கப்பட்ட வங்கி முகவர் ஆவார். இந்த வணிகர் தூதர் (Business Correspondent – BC) மைக்ரோ ஏடிஎம் (MicroATM டெர்மினல்) மூலம் வங்கி சேவையைப் பெற விரும்புவோருக்கு அடிப்படை வங்கி சேவைகளை வழங்குகின்றார்.

AePS சேவையின் கீழ் கிடைக்கும் சேவைகள்

AePS சேவையின் கீழ் கிடைக்கும் சேவைகள் பின்வருமாறு:

  • ரொக்க பணம் எடுத்தல் (Cash Withdrawal)
  • கணக்கின் இருப்பு நிலை தெரிந்துகொள்ளுதல் (Balance Enquiry)
  • மின் ஸ்டேட்மென்ட் (Mini Statement).

Latest Slideshows

Leave a Reply