Afghanistan Vs England Match : ரஷித் கானுக்காக ஒன்று திரண்டு உற்சாகப்படுத்திய இந்திய ரசிகர்கள்

ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக கோப்பை லீக் போட்டியில் (Afghanistan Vs England Match) ரஷித் கானுக்கு ரசிகர்கள் பெரும் ஆதரவு அளித்தனர்.

இந்திய அணி விளையாடாத மற்ற உலகக் கோப்பை போட்டிகளுக்கு ரசிகர்கள் அதிக அளவில் வராத நிலையில், இந்தப் போட்டியில் டெல்லியில் உள்ள மைதானத்தில் பெரும் கூட்டம் காணப்பட்டது. அனைவரும் ஆப்கன் அணியின் முன்னணி வீரர் ரஷித் கானுக்கு ஆதரவாக கோஷமிட்டு அவரை உற்சாகப்படுத்தினர்.

Afghanistan Vs England Match :

பொதுவாக இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சச்சின், கங்குலி, யுவராஜ் சிங், தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோருக்கு பேட்டிங் மற்றும் பீல்டிங் செய்யும் போது தங்கள் ஆதரவை வெளிப்படுத்துவார்கள். ஆனால், முதல் முறையாக வெளிநாட்டு கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு பாரிய ஆதரவு கிடைத்துள்ளது. இந்தப் போட்டியில் (Afghanistan Vs England Match) ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தாலும் தொடர்ந்து ரன்களை குவித்தது. ஏழாவது விக்கெட்டுக்காக களம் இறங்கிய ரஷித் கானை டெல்லி ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். அவர் பேட்டிங் செய்யும் போது ஒவ்வொரு ரன்னுக்கும் அவரது பெயரைச் சொல்லி அவரை ஆதரித்தனர்.

Afghanistan Vs England Match : இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் 284 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து சிறப்பாக பந்து வீசினாலும், கிறிஸ் வோக்ஸ் மற்றும் சாம் கர்ரன் அதிக ரன்களை விட்டுக் கொடுத்தனர். இதனால் ஆப்கானிஸ்தான் அணி எளிதாக பெரிய ஸ்கோரை எட்டியது.

ரஹ்மானுல்லா குர்பாஸ் :

ரஹ்மானுல்லா குர்பாஸ் 57 பந்துகளில் 80 ரன்கள் எடுத்தார். இக்ரம் அலிகில் 58 ரன்கள் எடுத்தார். ரஷித் கான் 22 பந்துகளில் 23 ரன்கள் எடுத்தார். பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்ட ரஷித் கான் இங்கிலாந்து அணிக்கு மிகக் குறைந்த ரன்களையே விட்டுக்கொடுத்தார்.

Latest Slideshows

Leave a Reply