Agal Vilakku Book Review : மு.வரதராசன் எழுதிய அகல் விளக்கு புத்தக விமர்சனம்

ஆசிரியர் குறிப்பு

அகல் விளக்கு என்பது மு.வரதராசனார் எழுதிய ஒரு வரலாற்று புதினமாகும். இந்நூல் இரண்டு நண்பர்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் கதையை தழுவி மு.வரதராசனார் எழுதியுள்ளார். இந்த நூல் இன்றைய சமுதாயத்தில் உள்ள பல்வேறு பிரச்சனைகளையும், வாழ்க்கையின் ஏற்றத் தாழ்வுகளையும் (Agal Vilakku Book Review) தெளிவாக எடுத்துரைக்கிறது. இந்த புதினத்திற்காக மு.வரதராசனாருக்கு சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டுள்ளது.

புத்தக சுருக்கம்

சந்திரனும் வேலனும் இளமைகாலத்து நண்பர்கள். இருவரும் குழந்தை பருவத்தில் இருந்து ஒரே பள்ளியில், ஒரே வகுப்பில் பயின்று, ஒன்றாகவே விளையாடி வளர்ந்தவர்கள். ஆனால், பத்தாம் வகுப்புக்குப் பிறகு, அவர்களின் வாழ்வில் முதல்முறையாக பிரிவு ஏற்பட்டது. இந்த பிரிவானது ஒருவரை ஒருவர் எட்டாத அளவிற்கு கொண்டு சேர்த்துவிட்டது. ஆனால் சந்திரனின் வாழ்க்கை மேடு பள்ளம் நிறைந்தது. அதேபோல் வேலனுடைய வாழ்க்கை பறந்த சமவெளியில் அமைதியாகச் ஓடும் பெரிய ஆற்றை போல் கடந்து செல்கிறது.

இருவரும் எதார்த்தமாக ஒரு நாள் சந்திக்கும் போது சந்திரன், வேலனிடம் தான் ஒரு பெண்ணைக் காதலிப்பதாகவும், ஆனால் அவள் என்னை விட்டுப் பிரிந்து சென்று விட்டதாகவும் வேலனிடம் கூறுகிறான்.  அதேசமயம் வேலனுக்கு ஒரு நல்வாழ்க்கை கிடைத்துள்ளதை தெரிவிக்கிறான். ஆனால் சந்திரன் பிரிந்து சென்ற தன் காதலியை நினைத்து வருத்தப்பட்டு இருப்பதை பார்த்து, அவன் சந்திரனைத் திருத்த முயல்கிறான், ஆனால் சந்திரன் கடைசியில் இறந்து விடுகிறான். இக்கதையின் மூலம் சந்திரனைப் போல் கூரிய அறிவும், அழகும் பெற்று அதனால் செருக்கடைந்து வாழ்க்கையில் சீரழிந்து (Agal Vilakku Book Review) தாமும் கெட்டுப், பிறர்க்கு சுமையாக வாழ்வதைவிட, வேலனை போல் அறிவு குறைவாக இருந்தாலும், இளைஞர்கள் நல்ல சிறந்த பண்புகளைப் பெற்று அடக்கமான வாழ்வு வாழ வேண்டும் என மு.வரதராசனார் உணர்த்தியுள்ளார்.

சமுதாய சிந்தனைகள் (Agal Vilakku Book Review)

Agal Vilakku Book Review - Platform Tamil

இந்த அகல் விளக்கு நாவலின் மூலம் ஆசிரியர் மு.வரதராசனார் இன்றைய சமுதாயத்தில் மனிதர்கள் எப்படி வாழ வேண்டும், காதல் என்றால் என்ன, நண்பர்களின் கடமை என்ன போன்ற பல கருத்துக்களை முன்வைக்கிறார். மேலும் இந்நூல் சமுதாயத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள், நட்பு, இளைஞர்களின் வாழ்க்கை போன்ற பல கருத்துக்களை முன்வைக்கிறது. மேலும் இந்த நூல் குறிப்பாக இளைஞர்களுக்கும், சமூக அக்கறை கொண்டவர்களுக்கும், சிறந்த வாசிப்பு அனுபவத்தை தரும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

Latest Slideshows

Leave a Reply