Agathi Keerai Benefits : அகத்திக் கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் கீரைகளுக்கு தனியிடம் உள்ளது. அதிலும், அகத்திக் கீரையில் பல்வேறு நற்பயன்கள் (Agathi Keerai Benefits) கொட்டிக் கிடக்கிறது. தமது அகத்தை சுத்தப்படுத்துவதனால் அகத்திக் கீரை என்று கூறப்படுகிறது. அகத்திக் கீரையுடன் சின்ன வெங்காயம் மற்றும் சுத்தமான பசு நெய் சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு நல்ல பலன் கிடைக்கும். இவை வயிற்றுப்புண் மற்றும் வாய் புண்களை குணப்படுத்தும். மேலும் அகத்திக் கீரையினால் கிடைக்கும் பலன்களை பற்றி தற்போது காணலாம்.   

Agathi Keerai Benefits - அகத்திக் கீரையின் பயன்கள் :

தாய்ப்பால் சுரக்க :

குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு, தாய்ப்பால் சுரப்பு ஆனது குறைந்துவிடும் நேரத்தில் அகத்திக் கீரையுடன் வெள்ளைப் பூண்டு, பாசிப் பருப்பு சேர்த்து கூட்டு வைத்து தாய்மார்கள் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் நன்கு சுரக்கும். அது குழந்தைகளுக்கும் வலுவடைய உதவும்.

எலும்பு பலமடைய :

பலருக்கும் எலும்பு பலம் இல்லாமல் இருக்கும். அந்த இடத்தில் லேசாக தட்டினாலே எலும்புப் பகுதியில் வலி எடுக்கும். இவ்வாறு உள்ளவர்கள் அகத்திக் கீரையை உணவோடு சாப்பிட்டு வந்தால், எலும்பு பலமாக (Agathi Keerai Benefits) இருக்கும். 

எதிர்ப்பு சக்தி அதிகரிக்க :

அகத்திக் கீரையில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. அகத்திக் கீரை ஃப்ரீ ரேடிக்கல் ஆக்சிஜனேற்றத்திற்கு எதிராக பயன்படுகிறது. மேலும் டிஎன்ஏ பாதிப்பை தடுக்கிறது. அகத்திக் கீரை இரத்தத்தில் இருக்கும் செலினியம், துத்தநாகம், மெக்னீசியம் ஆகியவற்றின் அளவை உயர்த்துகிறது. மேலும் அகத்திக் கீரை அதிக உணர்திறனுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை வெளிப்படுத்துகிறது.

சர்க்கரை கட்டுப்பாடு :

அகத்திக் கீரையை உணவில் தொடர்ந்து சேர்ப்பது அனைத்து நீரிழிவு நோய்களுக்கும் கணையத்தின் சேதமடைந்த செல்களை சரிசெய்வதற்கு, இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதற்கும் பயனளிக்கிறது. அகத்திக் கீரை கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும் மற்றும் கொழுப்புச் சத்தை பராமரிக்கவும் செய்கிறது.

புற்றுநோயை தடுக்க :

வலுவான ஆக்சிஜனேற்ற பண்புகளைக் கொண்ட அகத்திக் கீரை, லிப்பிட் பெராக்சிடேஷனைத் தடுக்கிறது, கட்டி உயிரணுக்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது. மேலும் நுரையீரல் புற்றுநோய் செல்களுக்கு எதிராக அப்போப்டொசிஸ் விளைவை கொண்டு இருப்பது நன்கு அறியப்பட்டவை மற்றும் பெருங்குடல் புற்றுநோயைத் தடுக்கின்றன.

Latest Slideshows

Leave a Reply