Agriculture Employment 2023 : வேளாண் துறையில் வேலைவாய்ப்பு

Agriculture Employment 2023 : தமிழ்நாடு வேளாண்மை மற்றும் தோட்டக்கலை விரிவாக்க துணைப் பணிகளில் அடங்கிய உதவி வேளாண்மை அலுவலர் (Assistant Agriculture Officer) பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. TNPSC எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், அரசுத் துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அதன்படி, தமிழ்நாடு வேளாண்மை விரிவாக்க துணைப் பணியிடங்களில் காலியாக உள்ள உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் தோட்டக்கலை உதவியாளர் பணியிடங்களுக்கான நேரடி ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை TNPSC வெளியிட்டுள்ளது. உதவி வேளாண் அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலர் என மொத்தம் 263 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.  இந்த பணியில் சேர்வதற்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

Agriculture Employment 2023 - பணியிட விவரங்கள் :

நிறுவனம்: தமிழ்நாடு அரசு

பணியிடம்: உதவி வேளாண்மை அலுவலர் – 84

தகுதி: இந்தப் பதவிக்கு (Agriculture Employment 2023) விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 10-12 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் இரண்டாண்டு வேளாண் படிப்பை படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: இப்பணிக்கு (Agriculture Employment 2023) விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 வயது நிரம்பியவராகவும், 28 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

மாத சம்பளம்: தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.20,600 முதல் ரூ.76,900 வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in என்ற இணையத்தில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

தேர்வு முறை: இந்தப் பதவிக்கான (Agriculture Employment 2023) தேர்வு செயல்முறை ஒற்றை நிலையினை கொண்டது. விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் இடஒதுக்கீடு விதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும். ஆன்லைன் சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆதார் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 24/12/2023. மேலும் விவரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.  

Latest Slideshows

Leave a Reply