You are currently viewing Ahmedabad Air India Plane Crash : அகமதாபாத்தில் பயணிகளின் விமானம் விபத்து 242 பேரின் கதி என்ன?
Ahmedabad Air India Plane Crash - Platform Tamil

Ahmedabad Air India Plane Crash : அகமதாபாத்தில் பயணிகளின் விமானம் விபத்து 242 பேரின் கதி என்ன?

Ahmedabad Air India Plane Crash : அகமதாபாத்தில் பயணிகளின் விமானம் விபத்து 242 பேரின் கதி என்ன?

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து, லண்டனில் உள்ள கேட்விக் நகரை நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா B 787-8 ட்ரீம்லைனர் விமானம் விபத்துக்குள்ளாகி நாடு முழுவதும் (Ahmedabad Air India Plane Crash) பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

242 பேர் பயணம்

அகமதாபாத்தில் இருந்து ஏர் இந்தியாவிற்கு சொந்தமான போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் பிற்பகல் 1.38 மணி அளவில் லண்டனுக்கு புறப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் 2 பைலட், 230 பயணிகள், 10 விமான பணியாளர்கள் என மொத்தம் 242 பேர் பயணம் செய்தனர். இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில், சுமார் 625 அடி உயரத்தில் இருந்து விமான நிலையம் அருகே உள்ள மேகானி நகரின் மருத்துவ குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்து குறித்த தகவல் அறிந்ததும், தீ அணைப்புத் துறையினர், அகமதாபாத் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அவசர உதவி எண்கள் அறிவிப்பு

இந்த விமான விபத்து குறித்து தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து காந்தி நகரிலிருந்து 90 பணியாளர்களைக் கொண்ட 3 தேசிய பேரிடர் மீட்பு குழுக்களும், வதோதராவிலிருந்து மேலும் 3 மீட்பு குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மீட்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பயணிகள் தொடர்பான விவரம் அறிய 18005691444 என்ற அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகளின் விவரம் அறிவிப்பு (Ahmedabad Air India Plane Crash)

Ahmedabad Air India Plane Crash - Platform Tamil

இந்த விபத்து குறித்து ஏர் இந்தியா நிறுவனம் எக்ஸ் தளத்தில் அகமதாபாத்திலிருந்து லண்டன் கேட்விக் செல்ல வேண்டிய ஏர் இந்தியா 171 விமானம் விபத்தில் சிக்கியதாகவும், இந்த போயிங் 787-8 விமானத்தில் 169 இந்தியர்களும், பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த 53 பேரும், 7 போர்த்துகீசிய பயணிகளும், கனடாவைச் சேர்ந்த 1 பயணி என மொத்தமாக 242 பேர் இருந்தனர் என விளக்கம் அளித்துள்ளது.

இதுவரை 170 பேர் உயிரிழப்பு

இந்த விபத்து தொடர்பாக தற்போது 5 மணி வரை கிடைத்த தகவலின்படி இதுவரை 170 பேர் உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. மேலும் மீட்பு பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருவதால் இன்னும் உயிரிழப்பு அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இந்த துயரச் சம்பவத்திற்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராகுல் காந்தி, குடியரசு தலைவர் உள்ளிட்டோர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

Latest Slideshows

Leave a Reply

Leave a Reply