Airport In Karur : கரூரில் விமான நிலையம் அமைக்கப்படும் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு

கரூரில் தயாரிக்கப்படும் பொருட்களின் தரத்தை உயர்த்த வேண்டும். கரூரில் விமான நிலையம் அமைய வேண்டும் என்பது (Airport In Karur) எனது வாழ்நாள் கனவாக உள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

கரூர் விஷன் 2030

கரூரில் இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு (சிஐஐ) மற்றும் கரூர் ஜவுளி ஏற்றுமதியாளர்கள் சங்கம், அனைத்து வியாபாரிகள் சங்கம் இணைந்து 2030-ம் ஆண்டுக்குள் 50 ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தக இலக்கை எட்ட ‘2030 விஷன்’ என்ற திட்டத்தை துவக்கி உள்ளன. இத்திட்டம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கரூரில் மாரத்தான் ஓட்டம் மற்றும் விரைவு நடைப்போட்டி நடந்தது. இதைத்தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் உள்ள 73 தொழிற்சங்க கூட்டமைப்புகளுடன் கரூர், வெண்ணைமலை பகுதியில் உள்ள தனியார் கலையரங்கில் கருத்துக் கூட்டம் நடைபெற்றது.

கரூர் விஷன் 2030 -ன் அடிப்படையில் கரூர் ஜவுளி சங்கம் மூலம் ரூ.25 ஆயிரம் கோடியும், இதர தொழிற்சங்கங்கள் மூலம் ரூ.25 ஆயிரம் கோடியும் என மொத்தம் ரூ.50 ஆயிரம் கோடி வர்த்தகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக தொழிற்சங்கங்களின் வளர்ச்சிப் பாதையை (Airport In Karur) அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கு தேவையான யோசனைகள் மற்றும் திட்டமிடல் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியது

கரூர் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் 2030-ம் ஆண்டுக்குள் 50 ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தக இலக்குடன் வளர்ச்சி பாதையை நோக்கி பயணத்தை துவக்கியுள்ளனர். தொழிற்சங்கங்கள், தொழிற்சங்க கூட்டமைப்பு அரசிடம் விடுத்துள்ள கோரிக்கைகளை தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் கவனத்தில் எடுத்து நிறைவேற்ற (Airport In Karur) உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும். கரூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் மற்றும் வணிகர்களின் வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முதல்வர் கவனத்தில் எடுத்து அதிகாரிகளுடன் ஆலோசித்து குறைக்க ஏற்பாடு செய்யப்படும்.

கரூரில் விமான நிலையம் (Airport In Karur)

தொழில் வளர்ச்சி மற்றும் மாவட்டத்தின் வளர்ச்சிக்காக கரூரில் விமான நிலையம் அமைக்க விரைவில் இடம் தேர்வு செய்யப்பட்டு முதல்வரின் (Airport In Karur) கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு கரூரில் விமான நிலையம் அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். கரூர் மாவட்டத்திற்கு கடந்த 3 ஆண்டுகளில் 3000 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை தமிழக முதல்வர் வழங்கினார். கரூரில் வரும் டிசம்பர் மாதத்திற்குள் மினி டைட்டில் பார்க் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. குறிப்பாக கரூர்  மாநகராட்சி பகுதியில் மினி டைட்டில் பார்க் அமைக்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி அளித்துள்ளார்.

Latest Slideshows

Leave a Reply