Airtel Switches To Recycled PVC SIM Cards : Airtel மறுசுழற்சி செய்யக்கூடிய புதிய சிம் கார்டுகளை அறிமுகம் செய்யவுள்ளது

Airtel Switches To Recycled PVC SIM Cards :

சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்கும் பிளாஸ்டிக் சிம்கார்டுகளுக்கு பதிலாக மறுசுழற்சிக்கு ஏற்ற PVC சிம் கார்டுகளை Airtel நிறுவனம் (Airtel Switches To Recycled PVC SIM Cards) வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது. இதற்காக ஏர்டெல் நிறுவனம், IDEMIA என்ற டெக்னாலஜி நிறுவனத்துடன் இணைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஆண்டொன்றுக்கு இந்த சிம்கார்டுகளின் மறுசுழற்சி மூலமாக 165 டன்களுக்கும் அதிகமான புதிய பிளாஸ்டிக் உற்பத்தி செய்யப்படுவதை தடுக்க முடியும். ஏர்டெல் நிறுவனம் இதனால் 690 டன்களுக்கு மேல் கார்பன் டை ஆக்ஸைடின் உமிழ்வை தடுக்கவும் முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்த புதுவகை சிம்கார்டுகளின் (Airtel Switches To Recycled PVC SIM Cards) மூலம் Airtel நிறுவனத்தின் கூற்றுப்படி,

  • பசுமையான முறையில் வாயுக்களை குறைத்தல்
  • கழிவு பொருட்களை குறைத்தல்
  • மறுசுழற்சி மற்றும் தயாரிப்பு மறுபயன்பாடு போன்றவைகளை பெறுதல்
  • 2020-2021 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில், 2030-2031 ஆண்டில் 1 மற்றும் 2 GHG உமிழ்வையும் குறைப்பது
  • இதே காலக்கட்டத்தில் 3 GHG உமிழ்வை 42 சதவீதம் குறைக்க வேண்டும்

என்பதை ஏர்டெல் நிறுவனம் தன் இலக்காக வைத்துள்ளது. இந்நிலையில் சுற்றுப்புறத்துக்கு நன்மை பயக்கும் இவ்வகை சிம்களுக்கு நிச்சயம் மக்களிடம் வரவேற்பு இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இப்படியொரு மறுசுழற்சி அறிவிப்பினை (Airtel Switches To Recycled PVC SIM Cards) முதன்முதலாக அறிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம் என்று பார்தி ஏர்டெல்லின் (Bharti Airtel) சப்ளை செயின் இயக்குனர் பங்கஜ் மிக்லானி தெரிவித்துள்ளார்.

TRAI :

  • TRAI (Telecom Regulatory Authority Of India) இந்தியாவின் தொலைத்தொடர்பு துறையில் செயலிழக்கச் செய்யப்பட்ட ஏர்டெல் ப்ரீபெய்ட் சிம் கார்டை மீண்டும் இயக்குவது குறித்து வழிகாட்டுதல்கள் மற்றும் விதிகளின் தொகுப்பை வழங்குகிறது. TRAI நுகர்வோர் கையேட்டின் படி, 90 நாட்களுக்கு மேல் (சுமார் 3 மாதங்கள்) சிம் கார்டு பயன்படுத்தப்படாவிட்டால், அது செயலிழக்கச் செய்யப்பட்டதாகக் கருதப்படுகிறது.
  • 90 நாட்களுக்குப் பிறகு (சுமார் 3 மாதங்கள்), சிம்மை இன்னும் 30 நாட்களுக்கு ஆக்டிவேட் செய்து வைத்திருக்க, ப்ரீபெய்டு பேலன்ஸ் தொகையில் இருந்து ரூ.20 கழிக்கப்படும்.
  • செகண்டரி சிம்மை மறந்து 90 நாட்கள் பயன்படுத்தாமல் இருந்தால், கவலைப்பட வேண்டாம்.  சிம்மை மீண்டும் இயக்க 15 நாட்கள் (சுமார் 2 வாரங்கள்) அவகாசம் கிடைக்கும்.
  • சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். மின்னஞ்சலை 121@in.airtel.com-க்கு அனுப்ப வேண்டும்.

Latest Slideshows

Leave a Reply