Ajith Helped Aamir Khan And Vishnu Vishal : மழை வெள்ளத்தில் சிக்கி தவித்தவர்களுக்கு உதவிய தல அஜித்

விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் இருந்து சிறிது இடைவெளி விட்டு சென்னை வந்த தல அஜித், சென்னை வெள்ளத்தால் இங்கேயே தங்க நேரிட்டது. இந்நிலையில், சென்னை வெள்ளத்தில் சிக்கிய இரண்டு பிரபலங்களை தல அஜித் நேரில் சந்தித்து (Ajith Helped Aamir Khan And Vishnu Vishal) உதவி செய்தார். அந்த பிரபலங்கள் அஜித்துக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

மிக்ஜாம் புயல் :

டிசம்பர் மாதமானாலே மழை வெள்ளம் எங்கும் காணமுடியும். குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் வெள்ள அபாயம் அதிகமாக இருக்கும். இந்த ஆண்டு பாரபட்சமின்றி மழை பெய்யும் வகையில் கூடுதலாக புயல் வீசியது. இதனால், பல்வேறு தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டனர். சமூக வலைதளங்கள் மூலமாகவும், நேரிலும் பலரும் உதவி செய்து வரும் இந்த நிலையில் தல அஜித் செய்த ஒரு உதவி குறித்த பதிவுகள் (Ajith Helped Aamir Khan And Vishnu Vishal) தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விஷ்ணு விஷால் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் உள்ளார். தற்போது லால் சலாம் படத்தில் நடித்துள்ளார். சென்னையில் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களில் இவரும் ஒருவர். விஷ்ணு விஷால் மற்றும் பாலிவுட் நடிகர் அமீர்கான் இருவரும் காரப்பாக்கத்தில் தங்கியிருந்தனர். விஷ்ணு விஷால் தனது பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்பது குறித்தும், மின்சாரம், இணையதள சேவை, போன் சிக்னல் இல்லாதது குறித்தும் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார்.

இந்த பதிவு இணையத்தில் வைரலாக பரவ ஆரம்பித்தது. உதவிக்கு அழைத்துள்ளதாகவும், தன்னைப் போன்று கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உதவி கிடைக்கும் என நம்புவதாகவும் விஷ்ணு விஷாலின் பதிவிட்ட பதிவு வைரலானது. விஷ்ணு விஷாலின் இந்த பதிவு பல்வேறு தரப்பினரின் கவனத்தை ஈர்த்ததால் தமிழக அரசு சார்பில் மீட்பு குழுவினர் விஷ்ணு விஷாலின் இல்லத்திற்கு சென்று அவரையும் அமர்கானையும் மீட்டனர். விஷ்ணு விஷால் மீட்பு குழுவினருக்கு நன்றி தெரிவித்து ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், விஷால் மற்றும் அமீர் கானுடன் சேர்ந்து, அவர்கள் தனது வீட்டிற்கு அருகில் இருந்த வில்லா கம்யூனிட்டியில் இருப்பவர்களையும் மீட்டதாகவும், அதற்கு மீட்புப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்ததாகவும் விஷ்ணு விஷால் பதிவிட்டிருந்தார். அவர்களிடமிருந்து உணவைப் பகிர்ந்து கொண்டதாகவும், மீட்பவர்களுக்கு முடிந்தவரை உதவ வேண்டும் என்றும் அவர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Ajith Helped Aamir Khan And Vishnu Vishal :

Ajith Helped Aamir Khan And Vishnu Vishal : விஷ்ணு விஷாலும், அமீர்கானும் இப்படி ஒரு நிலையில் இருக்கிறார்கள் என்பதை ஒரு பொதுவான நண்பர் மூலம் அறிந்த அஜித், விஷ்ணு விஷால் இருக்கும் இடத்திற்குச் சென்று அவர்களுக்கு மட்டுமின்றி அருகில் உள்ளவர்களுக்கும் பயண ஏற்பாடுகளைச் செய்தார். இதற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் விஷ்ணு விஷால், அமீர்கான் மற்றும் அஜித் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு லவ் யூ அஜித் சார் என்று பதிவிட்டுள்ளார். சினிமா பிரபலங்கள் இதுபோன்ற பேரிடர்களில் உதவி வரும் நிலையில், பேரிடர் காலங்களில் அமைதியாக மற்றவர்களுக்கு உதவி செய்யும் அஜித் குமாரை அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். தல அஜித் செய்யும் இது போன்ற நல்ல செயல்கள் சமூகத்தில் கவனிக்கப்படாமல் போகிறது, மேலும் விஷ்ணு விஷால் பகிர்ந்துள்ள இந்த பதிவு தல அஜித் பற்றிய நல்ல விஷயங்களை சமூகத்திற்கு கொண்டு சென்று வருகிறது, மேலும் தல அஜித் ரசிகர்கள் விஷ்ணு விஷாலுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

Latest Slideshows

Leave a Reply