Ajith Kumar 53rd Birthday Gift: அஜித் பிறந்தநாளுக்கு ஷாலினி கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட்

தமிழ் ரசிகர்களால் தல என்று அழைக்கப்படும் அஜித்குமார் இன்று தனது 53வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அஜித்தின் ரசிகர்கள் இணையத்தில் பிறந்தநாள் வாழ்த்துகளை குவித்து வரும் நிலையில் அஜித்தின் மனைவி ஷாலினி அவருக்கு சர்ப்ரைஸ் பரிசு ஒன்றை அளித்துள்ளார்.

நடிகர் அஜித் அமராவதி படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு, அடுத்தடுத்து தமிழ் படங்களில் ஹீரோவாக நடித்த அஜித்குமார், மெல்ல மெல்ல தமிழ் சினிமாவில் காலூன்ற ஆரம்பித்து, இன்று தமிழ் நாட்டையே ஆட்டிப்படைத்து வருகிறார். பல முன்னணி இயக்குனர்களுடன் படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருகிறார். அஜித்தின் நடிப்பில் கடைசியாக துணிவு படம் கடந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியானது. பிளாக்பஸ்டர் ஹிட் ஆகி ஒன்றரை வருடங்கள் ஆகியும், அஜித்தின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு கூட இன்னும் முடியவில்லை. இது அஜித் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்பதை சொல்லவே தேவையில்லை. அஜித்குமார் தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு மே கடைசி வாரத்தில் தொடங்கும் என கூறப்படுகிறது.

ஷாலினி கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட் (Ajith Kumar 53rd Birthday Gift)

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பேபி ஷாலினி, குழந்தை நட்சத்திரமாக 55க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும், அவர் விஜய்க்கு ஜோடியாக காதலுக்கு மரியாதை படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ஷாலினி. இதையடுத்து இரண்டாவது படமான அமர்க்களம் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்தார். இந்த படத்தில் நடிக்கும் போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. அதன் பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டு ஒரே எண்ணம் கொண்ட ஜோடியாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு அஜிதா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.

இந்நிலையில் நடிகர் அஜித் தனது 53வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ரசிகர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், அஜித்தின் மனைவி ஷாலினி அஜித்துக்கு டுகாட்டி பைக்கை சர்ப்ரைஸ் பரிசாக அளித்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Latest Slideshows

Leave a Reply