Ajith Kumar Admitted To A Hospital In Chennai : அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அஜித்

Ajith Kumar Admitted To A Hospital In Chennai :

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித், தற்போது சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் (Ajith Kumar Admitted To A Hospital In Chennai) அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவரது நடிப்பில் தற்போது ‘விடாமுயற்சி’ என்ற திரைப்படம் தயாராகி வருகிறது. விடாமுயற்சி திரைப்படத்தை தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தை இயக்குனர் தமிழ் திருமேனி இயக்குகிறார். விடாமுயற்சி படத்தில் அஜித்துடன் திரிஷா, ஆரவ், ரெஜினா, ஆக்ஷன் கிங் அர்ஜுன் என மிகப்பெரிய நடிகர் பட்டாளமே நடிக்கிறது. இந்த படத்திற்கு இசைமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அஜர்பைஜானில் தொடங்கப்பட்டது. அங்கு 90 சதவீத படப்பிடிப்பை முடித்துவிட்டு படக்குழு கடந்த மாதம் சென்னை திரும்பியது. மீதமுள்ள படப்பிடிப்பை சென்னையில் முடிக்க திட்டமிட்டுள்ளனர். ஒரு மாதமாகியும் விடாமுயற்சி படப்பிடிப்பு தொடங்கவில்லை. இதனால் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வந்தார் அஜித்.

சமீபத்தில் அஜித் தனது மகன் பிறந்தநாளை தனது குடும்பத்தினருடன் சென்னையில் கொண்டாடினர். அப்போது அவருடன் மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா ஆகியோர் இருந்தனர். பிறந்தநாள் கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இந்த நிலையில் அஜித் திடீரென மருத்துவமனையில் (Ajith Kumar Admitted To A Hospital In Chennai) அனுமதிக்கப்பட்டுள்ளார். அஜித் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரது உடலில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும், வழக்கமான பரிசோதனைக்காக அஜித் அங்கு சென்றுள்ளதாகவும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது நடிகர் அஜித் குமார் முதுகுத் தண்டு பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக (Ajith Kumar Admitted To A Hospital In Chennai) செய்திகள் வெளியாகியுள்ளன. நடிகர் அஜித்குமார் ஏற்கனவே முதுகுத்தண்டில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்நிலையில் மீண்டும் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும், அப்பல்லோ மருத்துவமனையில் MRI மற்றும் CT ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Latest Slideshows

Leave a Reply