Ajith Kumar Father Funeral: அஜித்துக்கு ஆறுதல் கூறிய பிரபலங்கள்

தமிழ் சினிமாவையே அதிர வைக்கும் சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் நேற்று காலை உடல்நல குறைவால் காலமானார். இதை அறிந்த உதயநிதி ஸ்டாலின் தான் முதல் ஆளாக அஜீத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதன்பிறகு அதிமுக சார்பில் அமைச்சர் ஜெயக்குமாரும் அஜித்தை நேரில் சந்தித்து பேசினார்.

அஜித் சார்பில் வந்த அறிக்கை:-

அஜித்தின் மேனேஜரிடம் இருந்து ஒரு அறிக்கை வந்தது. இந்த அறிக்கை நடிகர் அஜித் சார்பில் வெளியானது. அந்த அறிக்கையில் தந்தையின் மரணத்தை ஒரு குடும்ப நிகழ்வாக நடத்த உள்ளோம். இதனால் உங்கள் ஆதரவு தேவை, இதற்கு யாரும் வரவேண்டாம் என்று அதில் கூறப்பட்டிருந்தது. இல்லையெனில் இன்று அஜித் ரசிகர்கள் ஒன்று திரண்டு தமிழ் நாட்டையே ஸ்தம்பிக்க வைப்பார்கள். அதன் காரணமாகவே அஜித் இப்படியொரு கருத்தை வெளியிட்டிருந்தார்.

மேலும் திரையுலகை சார்ந்த பல பிரபலங்களும் நேரில் சென்று இரங்கல் தெரிவித்தனர். பிரசன்னா, மிர்ச்சி சிவா, இயக்குநர் ஏ.எல்.விஜய் மற்றும் தமிழ்த் திருமேனி ஆகியோர் அஜித்தின் வீட்டிற்கு சென்று இரங்கல் தெரிவித்தனர்.

அஜித்குமாரின் சகோதரர் அனில்குமார் கூறியது:-

அஜித்குமாரின் சகோதரர் அனில்குமார் தனது தந்தையை பற்றி யூடியூப் சேனல் ஒன்றில் பேசியது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் எங்கள் பெற்றோர்கள் எங்களை மிகவும் கட்டுப்பாட்டுடன் வளர்க்கவில்லை. நிறைய சுதந்திரம் கொடுத்தார்கள். எங்கள் தந்தை ஒரு கிளர்ச்சியாளர். படிப்பில் அவருக்கு அதிக ஆர்வம் இல்லை. ஆனாலும் அவர் மிகவும் புத்திசாலி. இணையத்தை மிக எளிதாக கையாள்வார்.

அப்பாவும் அம்மாவும் வெவ்வேறு கலாச்சார பின்னணியை சேர்ந்தவர்கள். தந்தை தமிழ் கேரளாவில் வளர்ந்தவர். அம்மா சிந்தி கராச்சியை சேர்ந்தவர். இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது அவர் இந்தியா வந்தார். நாங்கள் டீனேஜில் இருந்தபோது ​​புகைபிடிப்பதாக இருந்தாலும் மது அருந்துவதாக இருந்தாலும் எங்க முன்னாடி பண்ணுங்க என்று எங்கள் வீட்டில் சொல்லுவார்கள் என்று அஜித்குமாரின் சகோதரர் ‘அனில்குமார்’ பகிர்ந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் அஜித்துக்கு ஆறுதல் கூறிய விஜய்:-

அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியத்தின் உடல் பெசன்ட் நகரில் உள்ள மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. நடிகர் அஜித் குமாரின் அண்ணன் அனில் குமார் அவரது உடலுக்கு இறுதிச் சடங்குகளை செய்ததாக கூறப்பட்டது. இதையடுத்து நடிகர் அஜித்தின் தந்தை சுப்ரமணியனுக்கு இறுதி அஞ்சலி செலுத்த நடிகர் விஜய் பெசன்ட் நகர் செல்வதற்கு திட்டமிட்டிருந்தார். ஆனால் அதற்குள் இறுதிச்சடங்கு முடிந்துவிட்டது. இந்நிலையில் விஜய் ECR சாலையில் உள்ள நடிகர் அஜித்தின் இல்லத்திற்கு நேரில் சென்று அஜித் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இருவரின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டதாவது: “ஒருவரின் துயரத்தில் பங்கேற்பதே சிறந்த நட்பு” என பாராட்டியுள்ளனர்.

அஜித்துக்கு பக்கபலமாக நின்ற நடிகர்:-

பிரபல ஸ்டண்ட் நடிகர் ‘பெசன்ட்’ ரவி காலையில் தந்தை இறந்த செய்தி கேட்டது முதல் இறுதி ஊர்வலம் வரை அஜித்தின் பக்கம் நின்றார். அனைத்து சடங்குகளையும் முடித்து விட்டு அஜித்தை காரில் அனுப்பி வைப்பது வரை ‘பெசன்ட் ரவி’ பக்கபலமாக இருந்தார். அஜீத் காரில் ஏறும் போது கூட ரவி கார் கதவை திறந்து அஜித் அமர்ந்ததும் ‘சார் வீட்டுக்கு போங்க சார்’ என்று கேட்டு அவரை வழியனுப்பி வைத்தார். கிளம்பும் போது அஜித் ரவியை பார்த்து கை குனிந்து வணங்கினார். அதுமட்டுமல்லாமல் பல்வேறு திரைதுறை நட்சத்திரங்கள் அனைவரும் தனது ட்விட்டர் பக்கத்தில் அஞ்சலி செலுத்தி உள்ளனர்.

Leave a Reply

Latest Slideshows