Ajith Kumar Serves Biryani To His Biker Friends : பைக்கர்களுக்கு பிரியாணி செய்து கொடுத்த நடிகர் அஜித்

மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பிற்கு இடையே பைக்கில் பயணம் செய்து வருகிறார். இந்நிலையில் அஜித் பைக் பயணத்தின் போது தனது பைக்கர்களுக்கு பிரியாணி செய்து கொடுக்கும் (Ajith Kumar Serves Biryani To His Biker Friends) வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக அஜித் திகழ்ந்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியானது. அந்த படம் அஜித்திற்கு நல்ல வெற்றியை கொடுத்ததால், அவர் அடுத்ததாக விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.

துணிவு படம் முடிந்ததும் அஜித் பைக்கில் உலக சுற்றுப்பயணம் சென்றார். கிட்டத்தட்ட 4, 5 மாதங்கள் சென்ற நிலையில் அடுத்த படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், லைகா நிறுவனம் தயாரிக்கும் விடாமுயற்சி  படத்தில் அஜித் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. இப்படத்தை முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக அறிவிக்கப்பட்டு பின்னர் மகிழ் திருமேனி இயக்குவார் என அறிவிக்கப்பட்டது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் அர்ஜுன், ஆரவ் மற்றும் பலர் இணைந்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் மற்றும் சென்னையிலும் நடைபெற்றது.

Ajith Kumar Serves Biryani To His Biker Friends :

இதற்கிடையில், இறுதிக்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெறவிருந்த நிலையில் அஜித்குமார் மருத்துவ பரிசோதனைக்கு சென்றார். அப்போது அவருக்கு காது அருகே வீக்கம் காணப்பட்டு சிறு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து 10 நாட்கள் ஓய்வில் இருந்த அஜித், மீண்டும் படப்பிடிப்பிற்கு முன் பைக்கில் பயணம் மேற்கொண்டுள்ளார். அதன் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. தொடர்ந்து பைக் ஓட்ட கற்றுத் தந்த வீடியோவும் வெளியானது. இந்நிலையில் அஜித் தனது பைக் குழுவினருக்கு பிரியாணி செய்து கொடுக்கும் வீடியோ (Ajith Kumar Serves Biryani To His Biker Friends) தற்போது வெளியாகியுள்ளது. பல பிரபலங்களுக்கு பிரியாணி சமைத்து கொடுத்துள்ளார் என்பதும், தான் நடிக்கும் படங்களில் பணிபுரிபவர்களுக்கு தனது கையால் பிரியாணி செய்து கொடுப்பதும் குறிப்பிடத்தக்கது.

Latest Slideshows

Leave a Reply