AK 62 Title Announcement: அஜித் பிறந்தநாளில் வெளியான AK 62 படத்தின் டைட்டில்

லோகேஷ் கனகராஜின் “லியோ” திரைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. லியோ திரைப்படம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து இருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதற்கு ஏற்றார் போல் படக்குழுவும் வாரத்திற்கு ஒரு அப்டேட்டை வெளியிட்டு அனைவரையும் திணறடித்து வருகிறது.

தற்போது லியோ படத்தை முறியடிக்கும் வகையில் ஏகே 62 அதிரி புதிரியாக தயாராகி இருக்கிறது. துணிவு திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித் தனது அடுத்த படத்தை விரைவில் தொடங்குவார் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் பல்வேறு பிரச்சனைகளால் படம் இன்னும் தொடங்கப்படவில்லை. இந்தப் படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகியதை அடுத்து மகிழ் திருமேனி அஜித்தை வைத்து இயக்குகிறார். இது குறித்து ஏற்கனவே பல தகவல்கள் வந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவராத நிலையில் அஜித் ரசிகர்களும் படத்தின் டைட்டில் மீது மிகுந்த ஆர்வம் கொண்டு காணப்பட்டனர்.

பல மாதங்களாக காத்திருந்த ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் ஏகே 62 படத்தின் டைட்டிலைஆரவாரமாக வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்தது. அந்த நிலையில் அஜித்தின் பிறந்தநாளான இன்று மே 1ம் தேதி இந்த சர்ப்ரைஸ் கொடுக்க முடிவு செய்த நிலையில் தற்போது படத்தின் டைட்டிலை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தின் டைட்டில் “விடாமுயற்சி” என்று லைகா நிறுவனம் அதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தற்போது வெளிநாட்டில் இருக்கும் அஜித் பிறந்தநாளில் கூட இந்தியா திரும்ப மாட்டாராம். அதாவது 10ம் தேதி சென்னை திரும்புவார். அவர் ஊர் திரும்பினாலும் படத்தைத் தொடங்க முடியாது. ஏனென்றால் அனிருத் இசையில் உருவாக கூடிய இந்த படத்திற்கு ஹீரோயின் வேட்டை இன்னும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

இதை தொடர்ந்து மற்ற நடிகர்களின் தேர்வும் நடைபெறும். இவை அனைத்தும் முடிந்த பிறகே படத்தை தொடங்க தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அப்படியானால் ஜூன் மாத தொடக்கத்தில் தான் ஏகே 62 படம் தொடங்கப்படும். இதனால் ரசிகர்கள் நொந்து நூடுல்ஸ் ஆகி போயிருக்கின்றனர். இருந்தாலும் படத்தின் டைட்டில் வெளியானதால் மனதை தேற்றி வருகின்றனர்.

Latest Slideshows

Leave a Reply