AK 63 Update: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்தின் 'Good Bad Ugly' வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அஜித்தின் நடிப்பில் உருவாகி வரும் ‘விடாமுயற்சி’ படத்தின் அப்டேட்டுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு அதிரடியாக நேற்று அஜித்குமாரின் ஏகே63 அப்டேட் வெளியாகியுள்ளது. படத்திற்கு ‘குட் பேட் அக்லி’ என செம டெரரான டைட்டிலை ஆதிக் ரவிச்சந்திரன் வைத்துள்ளார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். மேலும் இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என ஆதிக் ரவிச்சந்திரன் அறிவித்திருப்பது அஜித் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

AK 63 Update: Good Bad Ugly

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகாமல் வருடத்திற்கு ஒரு படம் என தரமான கதைகளில் நடித்து வரும் அஜித், 2023ல் ஹெச்.வினோத் இயக்கத்தில் ‘துணிவு’ படத்தில் நடித்தார். இப்படம் ஜனவரி மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது. விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதே உத்வேகத்துடன் அஜித் 62க்கு தயாரானார். முதலில் இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால் அந்த படம் கை நழுவியதால் அஜித் 62 படத்தை இயக்கும் வாய்ப்பு ‘மகிழ் திருமேனிக்கு’ கிடைத்தது. படத்திற்கு ‘விடாமுயற்சி’ என்று தலைப்பு வைக்கப்பட்டது.

இப்படத்தில் அஜித்துடன் த்ரிஷா, பிரியா பவானி சங்கர், அர்ஜுன், ரெஜினா, ஆரவ் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் முழுவீச்சில் நடந்து முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. அதன் பிறகு மீண்டும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. அஜர்பைஜானில் இப்படத்தின் ஷூட்டிங் புகைப்படங்கள் மற்றும் அஜீத் சக நடிகர்களுடன் இருக்கும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அஜித்தின் 63 வது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் படத்தின் டைட்டில் போஸ்டரை ‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி படத்திற்கு ‘குட் பேட் அக்லி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம் 2025ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று குறிப்படப்பட்டுள்ளது.

Latest Slideshows

Leave a Reply