AK 64 : அஜித்துடன் இணையும் வெற்றிமாறன்...

AK 64 :

அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் தனது 63வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த தகவல் தீயாய் பரவும் நிலையில், அஜித்தின் Ak 64 பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது.

அஜித்துடன் இணையும் வெற்றிமாறன், துணிவைத் தொடர்ந்து அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்க, மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் தொடங்கியது. பிரமாண்டமாக உருவாகும் இந்த படம் ஆக்‌ஷன் ஜானரில் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல், அஜித்துடன் த்ரிஷா, பிரியா பவானி சங்கர், ரெஜினா உள்ளிட்டோர் நடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், அஜித்தின் ஏகே 63 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எல்ரெட் குமார் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அஜித் 175 கோடி ரூபாய் சம்பளம் வாங்கப் போவதாகவும் கூறப்படுகிறது. அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் சமீபத்தில் மார்க் ஆண்டனி படத்தின் மூலம் மாஸ் காட்டினார். இந்த படத்தின் வெற்றியை பார்த்த அஜித், ஆதிக் ரவிச்சந்திரனுக்கு ஏகே 63 படத்தை பரிசாக கொடுத்ததாக கூறப்படுகிறது. விடாமுயற்சி படப்பிடிப்பிற்குப் பிறகுதான் AK63 அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியாகும் என்று தெரிகிறது. ஆனால் அஜித் தற்போது தனது 64வது (AK64) படத்திற்கு தயாராகிவிட்டார். அதன்படி AK64 படத்தை எல்ரெட் குமார் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் இந்த படத்தை வெற்றிமாறன் இயக்கவுள்ளார் என்ற செய்தியும் வைரலாகி வருகிறது.

விடுதலை படத்தின் 2ம் பாகத்தை இயக்கி வரும் வெற்றிமாறன் அடுத்ததாக சூர்யாவுடன் வாடிவாசல் படத்தில் இணையவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் பிறகு வெற்றிமாறன் இயக்கும் படம் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆனால் திடீரென அஜித் – வெற்றிமாறன் கூட்டணி இணையும் என கூறப்படுகிறது. இந்த அப்டேட் அஜித் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், இந்த தகவல் உண்மையா என்பது குறித்த சரியான தகவல் தெரியவில்லை. விடாமுயற்சி, ஏகே 63 படங்கள் முடிந்த பிறகுதான் AK 64 பற்றி தகவல் தெரியவரும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் அஜித்-வெற்றிமாறன் கூட்டணி இணையுமா என்பதில் கொஞ்சம் சந்தேகம் என கோலிவுட் திரையுலகினர் கூறி வருகின்றனர்.

Latest Slideshows

Leave a Reply