AK Motorcycle Touring: பைக் சுற்றுலா நிறுவனத்தை தொடங்கிய அஜித்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் புதியதாக பைக் சுற்றுலா நிறுவனத்தை தொடங்கி உள்ளதாக குறிப்பிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரைஉலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் நடிப்பில் தற்போது விடாமுயற்சி என்ற திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது. இசைமைப்பாளர் அனிருத் இசைமைக்க உள்ளார். விடா முயற்சி படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
நடிகர் அஜித் நடிப்பு மட்டுமின்றி பைக் ரைடிங்கிலும் ஆர்வம் கொண்டவர். அந்தவகையில் பைக்கில் உலகையே சுற்றிவர முடிவு செய்துள்ள அஜித், அதன் முதல்கட்டதை நிறைவு செய்துள்ளார். கடந்த ஆண்டு இந்தியா முழுவதும் பைக் ஓட்டி முடித்த அஜித், கடந்த மாதம் நேபாளம் மற்றும் பூட்டானில் பைக் ரைடிங் செய்து அசைத்தினார். இந்நிலையில் அஜித் தற்போது தன்னை போன்று பைக் ரைடிங்கில் ஆர்வம் உள்ளவர்களுக்காக புதிய தொழில் ஒன்றை தொடங்கியுள்ளார். அது என்ன என்பதை விளக்கி அறிக்கையும் வெளியிட்டுள்ளார்.
AK Motorcycle Touring பற்றி அஜித் வெளியிட்ட அறிக்கை
நடிகர் அஜித் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: வாழ்க்கை ஒரு அழகான பயணம். எதிர்பாராத தருணங்கள், திருப்பங்கள் மற்றும் திறந்த பாதைகளை கொண்டாடுங்கள். மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வெளிப்புறங்களில் எனது ஆர்வத்தை ஒரு தொழில்முறை முயற்சிக்காக மற்றும் விதத்தில் “ஏகே மோட்டோ ( AK Moto Ride )” என்ற மோட்டார் சைக்கிள் சுற்றுலா நிறுவனத்தை கொண்டு வந்திருக்கிறேன் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவின் இயற்கை எழில் கொஞ்சும் நிலப்பரப்புகளில் மட்டுமின்றி, அழகான சர்வேதேச சாலைகளில் பயணம் மேற்கொள்ள ஆர்வமுள்ள ரைடர்ஸ், பயணம் செய்ய விரும்புவோர் மற்றும் சாகச ஆர்வலர்கள் ஆகியவர்களுக்கு ‘ஏகே மோட்டோ ரைடு’ சுற்றுப் பயணங்களை வழங்கும்.
சௌகிரியம், பாதுகாப்பு ஆகியவற்றில் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் சுற்றுப்பயணங்கள் முழுவதிலும் நம்பகத்தன்மை உறுதி செய்து உன்னிப்பாக பராமரிக்கப்படும் சாகச சுற்றுலா சூப்பர் பைக்குகள் ஆகியவற்றை ஏகே மோட்டோ ரைடு வழங்கும். மோட்டார் சைக்கிள் சுற்றுப்பயணங்களை பற்றி அறிந்தவர்கள், தொழில்முறை வழிகாட்டிகள், மற்றும் பலர் தொடக்கம் முதல் இறுதி வரை ரைடர்களுக்கு தடையற்ற மற்றும் அதிவேக அனுபவத்தை வழங்குவார்கள். வாழு வாழ விடு என்று அவர் அறிவித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.