Akshayakalpa CEO Sashi Kumar ரூ.260 கோடி நிறுவனத்துக்கு அதிபதி

அக்ஷயகல்பா ஆர்கானிக் நிறுவனம் ஆனது இந்தியாவில் இயற்கை முறையிலான பால் வியாபாரம் செய்யும் நிறுவனம் என்ற சான்றிதழை பெற்ற முதல் நிறுவனமாக திகழ்கிறது. பிரபல மென்பொருள் நிறுவனமான விப்ரோவில் சஷி குமார் நல்ல சம்பளத்தில் பணியாற்றி வந்தார். இப்பெரிய நிறுவனத்தில் சஷி குமார் 13 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றிய பின் அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு சொந்தமாக தொழில் தொடங்கி உள்ளார்.

சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆவல் :

  • சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற இவரது தைரியம் பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும். இந்த அக்ஷயகல்பா நிறுவனம் ஆனது 2010 ஆம் ஆண்டு பெங்களூருவில் தொடங்கப்பட்டது. எந்தவொரு ஆண்டிபயாடிக்ஸ், செயற்கைப் பொருட்கள், ஹார்மோன் மற்றும் ரசாயன பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தாமல், இந்நிறுவனம் பால் மற்றும் பால் தயாரிப்புப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றது.

விவசாயத்தில் உள்ள விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களுக்கு உரிய வருமானம் பெற வேண்டும் :

  • விப்ரோ நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது, விவசாயத்தில் உள்ள விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களுக்கு உரிய வருமானம் பெறுவது மிகப்பெரிய பிரச்சனை இருப்பதை உணர்ந்து கொண்ட சஷி குமார் தன் தந்தை போன்ற பல விவசாயிகள் எதிர்கொண்ட சிக்கல்களை களைய முடிவு செய்தார்.
  • விவசாய குடும்பத்தைச் சேர்ந்த சஷி குமார் இந்தியாவின் விவசாய பொருளாதாரத்தை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில்  இந்நிறுவனத்தை தொடங்கி உள்ளார். விப்ரோ நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும்போதே, சஷி குமார் ஆர்கானிக் மற்றும் ரசாயனம் கலக்காத பொருட்களுக்கு அதிக தேவையுள்ளது என்பதை உணர்ந்து இந்நிறுவனத்தை தொடங்கியுள்ளார். விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களுக்கு உரிய வருமானம் பெற வேண்டும் என்பதை நன்கு புரிந்துகொண்ட சஷி குமார் (Akshayakalpa CEO Sashi Kumar) அவர்களின் பொருட்களை சந்தைக்கு எடுத்துச் செல்வதற்கு இணைப்பை ஏற்படுத்த விரும்பினார். 

விவசாயிகள் விளைவித்த பொருட்களை சந்தைக்குச் எடுத்துச் செல்லும் இணைப்பு திட்டம் :

விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை சந்தைக்குச் எடுத்துச் செல்லும் இணைப்பு திட்டத்திற்கு பால் லாபகரமாக பொருளாக இருக்கும் என நினைத்த சஷி குமார் (Akshayakalpa CEO Sashi Kumar), பாலை தேர்வு செய்தார். அக்ஷயகல்பா ஆர்கானிக் நிறுவனம் ஆனது விவசாயிகளிடமிருந்து பாலை வாங்கி மக்களுக்கு வழங்கி வருகிறது. அக்ஷயகல்பா ஆர்கானிக் நிறுவனம் ஆனது மக்களுக்கு அதிக தரமுள்ள பாதுகாப்பான பாலை தர வேண்டும் என்பதற்காக பாரம்பரிய விவசாய முறைகளோடு சேர்த்து நவீன தொழில்நுட்பங்களையும் பயன்படுத்துகிறது.

அக்ஷயகல்பா ஆர்கானிக் நிறுவனம் ஆனது 600 பண்ணைகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. அக்ஷயகல்பா ஆர்கானிக் நிறுவனத்தில் திறமை வாய்ந்த 400-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், மும்பை மற்றும் புனே போன்ற மெட்ரோ நகரங்களில் வசிக்கும் மக்களும் இவர்களது ஆர்கானிக் தயாரிப்புகளை விரும்பி வாங்குகிறார்கள். அக்ஷயகல்பாவின் தனித்துவமான செயல்பாட்டை மக்கள் பாராட்டி வருகிறார்கள். 2023-ம் நிதியாண்டில் இந்த அக்ஷயகல்பா ஆர்கானிக் நிறுவனத்தின் ஆண்டு வருமானம் ரூ.260 கோடி ஆகும்.

Latest Slideshows

Leave a Reply