Alabama Nitrogen Gas Execution : அமெரிக்கா வித்தியாசமான முறையில் மரண தண்டனை நிறைவேற்றியது

Alabama Nitrogen Gas Execution - நைட்ரஜன் வாயு மூலம் முதன்முறையாக குற்றவாளி உயிர் பறிக்கப்பட்டுள்ளது :

இரக்கம்கொண்ட மரண தண்டனை என்ற பெயரில் அமெரிக்கா குற்றவாளி ஒருவருக்கு நைட்ரஜன் வாயு செலுத்தி மரண தண்டனையை (Alabama Nitrogen Gas Execution) நிறைவேற்றி உள்ளது. அமெரிக்காவில் உள்ள அலபாமா மாகாண அரசு முதல்முறையாக இந்த முறையில் முதல் மரண தண்டனையை நிறைவேற்றி உள்ளது. அலபாமா சிறை நிர்வாகம் ஆனது ஆக்சிஜன் இல்லாமல் உடலில் நைட்ரஜன் வாயுவை சுவாசிப்பதன் மூலம் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் முறையை பயன்படுத்தியுள்ளது. இந்த முறையில் மரண தண்டனையை நிறைவேற்றுவதை அமெரிக்க அரசாங்கம் அங்கீகரித்துள்ளது. உலகில் நைட்ரஜன் வாயுவைப் பயன்படுத்தி மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட முதல் நபர் ஸ்மித் ஆவார் என்று மரண தண்டனை தகவல் மையம் ஆனது அறிவித்துள்ளது. அமெரிக்க அரசு இது வலியில்லாத மற்றும் இரக்கம்கொண்ட மரண தண்டனையாகும் என்று தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் ஊசியால் வழங்கப்படும் மரண தண்டனைக்குப் பிறகு, இப்போது இந்த வகையில் மரண தண்டனை (Alabama Nitrogen Gas Execution) ஆனது 26/01/2024 அன்று வழங்கப்பட்டுள்ளது.

கொலை வழக்கில் கென்னத் யூஜின் ஸ்மித்துக்குக் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பின்னணி :

அமெரிக்காவைச் சேர்ந்த சார்லஸ் சென்னட் தனது மனைவி எலிசபெத் சென்னட் பெயரில் அதிக தொகை அளவில் காப்பீடு ஒன்றை எடுத்திருந்தார். அந்த அதிக தொகைக்காக சார்லஸ் சென்னட் தனது மனைவி எலிசபெத் சென்னடரைக் திட்டமிட்டார். சார்லஸ் சென்னட் இந்த கொலையை செய்வதற்காக கென்னத் யூஜின் ஸ்மித் என்பவருக்குப் பணம் கொடுத்துள்ளார். தன் வேறொரு கூட்டாளியுடன் இணைந்து கென்னத் யூஜின் ஸ்மித் சார்லஸின் மனைவி எலிசபெத்தைக் கொலை செய்துள்ளார். இதையடுத்து கணவர் சார்லஸ் தற்கொலை செய்துகொண்டார். கென்னத் யூஜின் ஸ்மித்தின் கூட்டாளிக்கு இந்த வழக்கில் மரண தண்டனையானது  விதிக்கப்பட்டு, அது 2010-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.   கடந்த 2022-ஆம் ஆண்டு அந்த கொலை வழக்கில் கென்னத் யூஜின் ஸ்மித்துக்குக் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இதற்காக அதிகாரிகள் அவருக்கு ஊசி வழியே தண்டனையை நிறைவேற்ற முடிவு செய்தனர். அவருடைய உடலில் மருந்து செல்லும் இணைப்பைச் சரியாக மேற்கொள்ள ஊசி போடுவதற்கான நரம்பு அவரது உடம்பில் கண்டுபிடிக்க முடியாமல் போனதால் மரண தண்டனை நிறைவேற்ற முடியாமல் போனது இந்நிலையில் 26/01/2024  அன்று அவருக்கு வித்தியாசமான முறையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அலபாமா சிறையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் படுக்கையில் படுக்க வைக்கப்பட்ட கென்னத்துக்கு வெறும் நைட்ரஜன் வாயுவை மட்டும் சுவாசிக்க அளிக்கப்பட்டு இந்த மரண தண்டனையானது நிறைவேற்றப்பட்டது. 30 மணி நேரம் ஆனது நிர்ணயிக்கப்பட்ட போதிலும் கென்னத் 22 நிமிடங்களில் உயிரிழந்தார். அந்த 22 நிமிடங்களும் கென்னத்  துடித்ததாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஐநா மனித உரிமைகள் தலைவர் வோல்கர் டர்க் கருத்து :

ஐநா மனித உரிமைகள் தலைவர் வோல்கர் டர்க், “இந்த நைட்ரஜன் வாயு மூச்சுத்திணறல் முறை மூலம் அமெரிக்காவில் கொலைக் குற்றவாளியான ஸ்மித்திற்கு மரண தண்டனை நிறைவேற்றியது சித்திரவதைக்கு சமம்” என்று தெரிவித்துள்ளார். இரக்கம் கொண்ட மரண தண்டனை என்ற பெயரில் இந்த மரண தண்டனையானது  நிறைவேற்றப்பட்டுள்ள போதிலும் இது  ஒரு கொடூர முறை (Alabama Nitrogen Gas Execution) என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். சமூக ஆர்வலர்கள் இதுபோன்ற மரண தண்டனைகளை நிறைவேற்றுவதை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

Latest Slideshows

Leave a Reply