Amaran Director Directs By Dhanush 55 : தனுஷின் 55-வது படத்தை இயக்கும் அமரன் இயக்குநர்

அமரன் படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தனுஷின் 55-வது படத்தை இயக்க இருப்பதாக (Amaran Director Directs By Dhanush 55) அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கியுள்ளன.

Amaran Director Directs By Dhanush 55

ஜூலை மாதம் தான் தனுஷின் பிறந்தநாள் ஆனால், தற்போது தனுஷ் படத்தின் அப்டேட்கள் ஏன் குவிகின்றன என்று ரசிகர்கள் வியப்படையும் அளவுக்கு அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகி வருகின்றன. தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை படத்தின் ரிலீஸ் தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், அடுத்ததாக அமரன் பட இயக்குநருடன் தனுஷ் இணைய இருப்பதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Amaran Director Directs By Dhanush 55) வெளியாகியுள்ளது. 2017ஆம் ஆண்டு ராஜ்குமார் பெரியசாமி, கௌதம் கார்த்திக்கை வைத்து ரங்கூன் என்னும் படத்தை இயக்கினார். ஆனால் அந்த படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் கொண்டாடத் தவறிவிட்டனர். பிக்பாஸ் நிகழ்ச்சியை இயக்கி வந்த ராஜ்குமார் பெரியசாமி கமல்ஹாசன் மற்றும் சிவகார்த்திகேயனுடன் இருந்த நட்பின் காரணமாக அமரன் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்படம் மாபெரும் வெற்றியடைந்துள்ள நிலையில் அடுத்ததாக தனுஷை வைத்து படம் இயக்கவுள்ளார்.

தனுஷின் 55-வது படத்தின் பூஜை

தனுஷின் 55 வது படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ள நிலையில் படத்தின் பூஜையானது (Amaran Director Directs By Dhanush 55) நேற்று நடைபெற்றது. அதன் புகைப்படங்களை கோபுரம் சினிமாஸ் வெளியிட்டது. ராஜ்குமார் பெரியசாமி தனது இணையத்தள பக்கத்தில் அடுத்தடுத்து நல்ல விஷயங்கள் நடக்கின்றன. இந்தியாவிலேயே  திறமையான நடிகரான தனுஷை இயக்குவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்று பதிவிட்டுள்ளார். அமரன் அறிவிப்பின் போது சிவகார்த்திகேயன், சாய் பல்லவி இருவரும் பூஜையில் கலந்து கொண்டனர். ஆனால் நேற்று  தனுஷ் மட்டும் அவசர அவசரமாக பட பூஜையில் கலந்து கொண்டார். வெற்றிமாறன், அன்புச் செழியன், ராஜ்குமார் பெரியசாமி ஆகியோர் மாலை அணிவித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் படத்தின் நாயகி யார் என்பது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் மீண்டும் சாய் பல்லவி நடிக்க வேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். ராஜ்கமல் நிறுவனமும், சோனி நிறுவனமும் இணைந்து தயாரித்த அமரன் திரைப்படம் 200 கோடி ரூபாய் வரை வசூல் செய்ய உள்ள நிலையில் படத்தின் தரத்தைக் கண்டு வியந்த நடிகர் தனுஷ் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் (Amaran Director Directs By Dhanush 55) நடிக்க உடனடியாக கமிட்டானார். அமரன் பட இயக்குநரை தனுஷ் தேர்ந்தெடுத்திருப்பது ரசிகர்களை ஆச்சிரியப்படுத்தியுள்ளது. இட்லி கடை முடிந்தவுடன் இளையராஜா வாழ்க்கை வரலாற்று படத்திற்கு தனுஷ் செல்வார் என நினைத்த ரசிகர்கள் தற்போது அடுத்ததாக ராஜ்குமார் பெரியசாமியின் படம் தயாராகும் என்பது உறுதியாகியுள்ளது. இந்த திரைப்படத்தை அடுத்த தீபாவளிக்கு வெளியிட ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அமரன் வெற்றி

அமரன் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் ரிலீஸுக்கு முன்பே முன்பதிவில் அதிக வசூலை பெற்றுள்ளது. மேலும் வெளியாகி 6 நாட்களிலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. படம் வெளியாகி 6 நாட்கள் ஆன நிலையில் இந்த படம் தமிழகத்தில் மட்டும் ரூ.3.99 கோடி வசூலுடன் இதுவரை மொத்தம் ரூ.92.69 கோடி வசூல் செய்துள்ளது. இந்தியாவில் இப்படம் 8 நாட்களில் ரூ.114.51 கோடி வசூலித்துள்ளது. மேலும் Sacnilk.com என்ற இணையதளம் உலக அளவில் 180 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக கூறியுள்ளது.

Latest Slideshows

Leave a Reply