Amaran Release Date : சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அமரன்’ படத்தின் ரிலீஸ் தேதி (Amaran Release Date) குறித்த அதிகாரப்பூர்வ தகவலை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் :

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர்களில் முக்கியமானவர் நடிகர் சிவகார்த்திகேயன். ‘கலக்க போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் போட்டியாளராக அறிமுகமான சிவகார்த்திகேயன், பின்னர் தொகுப்பாளராகவும், துணை நடிகராகவும் படிப்படியாக முன்னேறி தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். நடிகர் சிவகார்த்திகேயனின் வளர்ச்சியை திரை ரசிகர்கள் கண்கூடாக பார்த்துள்ளனர். அவரது அசாத்தியமான திறமையை விட அவரது விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் தான் அவருக்கு இந்த அளவு வளர்ச்சியை கொடுத்துள்ளது. தன்னுடைய நகைச்சுவைக்கு ஏற்ற கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து வெள்ளித்திரையில் அடியெடுத்து வைத்த சிவகார்த்திகேயன், அதன்பிறகு அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடித்த கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து தற்போது ஆக்ஷன் ஹீரோவாக கலக்கி வருகிறார்.

அமரன் :

சிவகார்த்திகேயன் தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமாக நடித்து வருகிறார். சமீபத்தில் வெளிவந்த மாவீரன், அயலான் படங்களுக்கு பிறகு கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் ‘அமரன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, சாய் பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், புவன் அரோரா, ராகுல் போஸ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயன் இதுவரை நடித்த படங்களில் இந்த படம் அதிக பொருட்செலவில் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டை சேர்ந்த மறைந்த இந்திய ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தின் ஆக்ஷனில் தெறிக்க விட்டுள்ளார் என்பது சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் மூலம் தெரிந்தது.

Amaran Release Date :

படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் நேற்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பின்படி, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அமரன்’ படம் தீபாவளியை முன்னிட்டு வரும் அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாகும் (Amaran Release Date) என படக்குழு அதிகாரப்பூர்வமாக தகவலை வெளியிட்டுள்ளது. இப்படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி மேலும் சில முன்னணி இயக்குனர்களின் படங்களிலும் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Latest Slideshows

Leave a Reply