Amaran Success Meet : அமரன் வெற்றிவிழாவில் எமோஷனலாக பேசிய சிவகார்த்திகேயன்

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடித்துள்ள படம் அமரன். அக்டோபர் 31ஆம் தேதி வெளியான இப்படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் (Amaran Success Meet) ஒன்றாக மாறியுள்ளது. இதுவரை சின்ன பட்ஜெட் படங்களில் நடித்து வந்த சிவகார்த்திகேயன் முதன்முறையாக 120 கோடி பட்ஜெட் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபகாலமாக வெளிவந்த படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன. இதனால் அமரன் படத்தின் மீது வசூல் ரீதியாக பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அமரன் படம் 100 கோடி வசூல் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. கடந்த சில வாரங்களாக சிவகார்த்திகேயனின் அமரன் படம் குறித்த செய்திகளே இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது.

இந்த படத்தில் மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு ராணுவத்தில் சேரும் ஆசை எப்படி வந்தது. அதற்காக அவர் என்ன எதிர்ப்பை சந்தித்தார்? முகுந்த் வரதராஜனுக்கும் அவரது மனைவி இந்துவுக்கும் காதல் எப்படி மலர்ந்தது? ராணுவத்தில் முகுந்தின் சாகசங்கள் என்ன? என்ற பல கேள்விகளுக்கு விடையாக அமைந்திருக்கிறது ‘அமரன்’ படத்தின் கதை. தீபாவளியன்று வெளியான இப்படம் (Amaran Success Meet) விமர்சன ரீதியாக மட்டுமில்லாமல் பாக்ஸ் ஆபிஸிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. மேலும் இந்த படத்தை திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்கள் பலரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அமரன் வெற்றிவிழா (Amaran Success Meet )

இந்நிலையில் அமரன் படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றுள்ளது. இதில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் பேசிய சிவகார்த்திகேயன் (Amaran Success Meet) பலரையும் கண்ணீரில் ஆழ்த்தினார். அவர் பேசுகையில் மேஜர் முகுந்த் வரதராஜனின் குடும்பத்தினருக்கு நன்றி. அவர்கள் சம்மதிக்காமல் இருந்திருந்தால் அமரன் படம் உருவாகியிருக்காது. மேலும் படத்தை பார்த்த பலரும் சிவகார்த்திகேயனை ஒரு இடத்தில் கூட பார்க்க முடியவில்லை என்று கூறுகிறார்கள்.

எமோஷனலாக பேசிய சிவகார்த்திகேயன்

விழாவில் சிவகார்த்திகேயன் பேசுகையில், அனைவருக்கும் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை குறித்து தெரியும். ஆனால் யாருக்கும் என்னுடைய அப்பா ஜெயிலர் போஸ் குறித்து தெரியாது. நான் எப்படியாவது இந்தப் படத்தை (Amaran Success Meet ) எடுக்க வேண்டும் என்பதற்கு அவர்தான் காரணம். எப்போதும் சீருடையில் தான் இருப்பார். இதுவரை நான் அவரைப் பற்றி பல்வேறு விஷயங்களைக் கேள்விப்பட்டு வருகிறேன். கடந்த 21 ஆண்டுகளாக நான் அவரைப் பற்றிய நினைவுகளுடன் மட்டுமே வாழ்ந்து வருகிறேன். இப்படத்தின் மூலம் எனக்கு அவராகும் வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படத்தில் என் அப்பாவைப் போல் இருக்க முயற்சி செய்தேன்.

முகுந்த் சாருக்கும் என் அப்பாவுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. என் அப்பா இறந்த பிறகு என் வாழ்க்கை முழுவதும் மாறிவிட்டது. அவரது இறுதிச் சடங்கிற்குப் பிறகு, என் தந்தையின் உடைந்த எலும்புகளைப் பார்த்தேன். அப்போது 17 வயது சிறுவனின் வாழ்க்கையும் சிதைந்தது. அமரன் படத்தின் (Amaran Success Meet ) மூலம் உடைந்த எலும்புகளை ஒட்டி என்னை பலப்படுத்திய ரசிகர்களுக்கு நன்றி. அமரன் படத்தின் க்ளைமாக்ஸ் போலதான்  என்னுடைய அம்மாவும் ஜனாதிபதியிடம் இருந்து பதக்கம் பெற்றார். அமரன் படத்தைப் பார்த்து முதல்வர் பாராட்டு, துணை முதல்வர் பாராட்டு. நீங்கள் அனைவரும் என்னைப் பாராட்டுகிறீர்கள். எனக்கு இப்படி ஒரு இடத்தினை ஏற்படுத்தி கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி. என அவர் கூறினார். அப்போது சிவகார்த்திகேயனின் கண்கள் கலங்கியதால் அங்கு கூடியிருந்த பலரும் அழுதனர்.

Latest Slideshows

Leave a Reply