Amaran Trailer : சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் படத்தின் ட்ரெய்லர் வெளியீடு

Amaran Trailer

சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் படத்தின் ட்ரெய்லர் (Amaran Trailer) வெளியாகி ரசிகர்களிடையே பரவலான வரவேற்பை பெற்றுள்ளது.

அமரன்

கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘அமரன்’. சாய் பல்லவி கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்திற்கு இசைமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். ராஜ்குமார் பெரியசாமி படத்தை இயக்கியுள்ளார். மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. இப்படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

அமரன் ட்ரெய்லர் (Amaran Trailer)

மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் அமரன். ஒரு உண்மைக் கதையை, குறிப்பாக இதுபோன்ற கதையை எடுத்து கையாளும் போது, ​​இயல்பாகவே சினிமாவுக்கு ஏற்றவாறு அதில் சில மாற்றங்கள் செய்யப்படுகின்றன. அமரனைப் பொறுத்த வரை, படத்தின் கதை முடிந்தவரை உண்மைக்கு நெருக்கமாக இருக்க முயற்சி செய்யப்பட்டுள்ளது என்பது படத்தின் ட்ரெய்லரில் உள்ள காட்சிகளைப் பார்த்தாலே தெரியும். மேஜர் முகுந்த் மற்றும் அவரது மனைவி இந்துவுக்கு இடையேயான காட்சிகளாக இருந்தாலும் சரி ராணுவ சண்டைகள் என எதுவாக இருந்தாலும், படத்தில் ஏராளமான உணர்ச்சிகரமான காட்சிகளை எதிர்பார்க்கலாம். அன்பான குடும்பத்தலைவராகவும் தேசத்தை காக்கும் வீரராகவும் சிவகார்த்திகேயன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். உண்மைக் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்றாலும் நடிப்பு நம்பிக்கை தருகிறது. பின்னணி இசையைப் பொறுத்தவரை, அட்டகாசமாக இல்லாமல் படத்தின் டிராமாவுக்கு ஏற்றவாறு இசையமைத்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.

உண்மைக் கதை என்பதால் இந்தப் படத்தில் ஹீரோவின் முடிவு எல்லோருக்கும் தெரியும். உண்மைக் கதைகள் படமாக்கப்படும்போது, ​​இப்படி நடந்திருக்கக் கூடாது என்று நாம் எதிர்பார்ப்பதையும் நம் படங்களில் வைப்பதற்கான சுதந்திரம் நமக்கு இருக்கிறது. அந்த வகையில் படத்தின் க்ளைமாக்ஸும் அதே உண்மைக்கதை போல இருக்குமா அல்லது ரசிகர்களுக்கு ஏதாவது மாற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பது சுவாரசியமான கேள்வியாக இருக்கும்.

Latest Slideshows

Leave a Reply