Ambani's Vantara Animal Sanctuary நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது

Ambani's Vantara Animal Sanctuary :

தற்போது நாட்டு மக்களின் கவனம் ஆனது அம்பானி குழுமம் குஜராத்தில் 3,000 ஏக்கரில் உருவாக்கியுள்ள “வந்தாரா” என்ற புதிய வனப்பகுதியில் (Ambani’s Vantara Animal Sanctuary) குவிய துவங்கி உள்ளது. ஆனந்த் அம்பானி திருமண முன்வைபவ நிகழ்ச்சி இங்குதான் நடைபெற்றது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் + ரிலையன்ஸ் அறக்கட்டளையின் கீழ் உருவாக்கப்பட்ட திட்டம் இந்த விலங்குகள் காப்பகம் திட்டம் ஆகும். குஜராத்தில் 3,000 ஏக்கர் பரப்பளவில் பிரிந்து கிடக்கும் காட்டுப்பகுதிக்குள் செயல்படுத்தப்பட்டுள்ள அம்பானி குடும்பத்தின் வந்தாரா என்ற திட்டம் ஆனது விலங்குகளை பராமரிப்பது மற்றும் அந்த ஜீவராசிகளின் நலனில் அக்கறை கொள்வது என்ற உயிரியில் பாதுகாப்பு முயற்சிகளில் செயலாற்றுகிறது. அம்பானி குடும்பம் இந்த “வந்தாரா”வில் தன்னை இணைத்து கொண்டு சிறப்பாக செயல்படுகிறது. 1 லட்சம் சதுர அடி மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆராய்ச்சி மையமும் இந்த வந்தாராவில் செயல்பட்டு வருகிறது. இந்த வந்தாராவில் இருக்கும் ஆராய்ச்சி மையத்தில், ICU, MRI, CT ஸ்கேன், X Ray, Ultrasound, மற்றும் Endroscopy உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த வந்தாராவில் 2,100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்கிறார்கள்.

இந்த வந்தாரா திட்டம் (Ambani’s Vantara Animal Sanctuary) இந்தியா மட்டுமன்றி, உலகின் எந்த மூலையிலும், விலங்குகள் காயமடைந்தாலும், பாதுகாப்பின்றி கிடந்தாலும், அவைகளை மீட்டு, சிகிச்சை தந்து, செழிப்பான வாழ்விடமும் அமைத்து தருவதை நோக்கமாக கொண்டு உள்ளது. இந்த வந்தாரா அமைப்பு 200-க்கும் மேற்பட்ட யானைகளை அந்தவகையில் மீட்டிருக்கிறது. இந்த வந்தாராவில் யானைகளுக்காகவே சிறப்பு மையம் ஆனது ஏற்படுத்தப்பட்டுள்ளது. தங்குமிடம், நீர்நிலைகள், நீர் சிகிச்சை குளங்கள் என யானைகளுக்கு நிறைய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. யானைகளுக்கான ஜக்குசிகளும் (Jacuzzi) மூட்டு வலி சிகிச்சைகளுக்காகவே ஸ்பெஷலாக அமைக்கப்பட்டிருக்கிறது. வந்தாரா மையத்தில் 14,000 சதுர அடிக்கு மேல் யானைகளுக்கான ஒரு சிறப்பு கிச்சன் இருக்கிறதாம். இந்த சிறப்பு கிச்சனில் ஒவ்வொரு யானைக்கும் சிறப்பு உணவு ஆனது தயாரிக்கப்படுகிறது.

ஒவ்வொரு விலங்குகளுக்கும் இதே போல் பிரத்யேக இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மற்ற விலங்குகளுக்காக 650 ஏக்கரில் விலங்குகள் நல்வாழ்வு மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நல்வாழ்வு மையத்தில் சர்க்கஸ் அல்லது உயிரியல் பூங்காக்களில் இடப்பற்றாக்குறையால் அவதியுறும் விலங்குகள் மீட்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. காண்டாமிருகங்கள், சிறுத்தைகள் மற்றும் முதலைகள் போன்ற பல விலங்குகளுக்கு  மறுவாழ்வு அளித்த பெருமை இந்த வந்தாராவுக்கு உண்டு. ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் வேட்டையாடுதல், கருணைக்கொலைகள் மற்றும் பராமரிப்பின்மையில் சிக்கிய விலங்குகளை வந்தாரா (Ambani’s Vantara Animal Sanctuary) மீட்டுள்ளது. இதே போல் காயமடைந்த 200 சிறுத்தைகள் மற்றும் பண்ணைகளில் இடமின்றி தவித்த ஆயிரக்கணக்கான முதலைகளை இந்த வந்தாரா மீட்டுள்ளது. தமிழ்நாட்டின் கடும் நெரிசல் மிகுந்த இடங்களில் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட முதலைகளை இந்த வந்தாரா மீட்டுள்ளது. 1,000-க்கும் மேற்பட்ட ஆபத்தான நிலையிலிருந்த பறவைகள் மற்றும் விலங்குகளை வந்தாரா மீட்டுள்ளது.

ரிலையன்ஸ் அறக்கட்டளையின் இயக்குநர் ஆனந்த் அம்பானியின் கனவுத்திட்டம் :

இந்த வந்தாரா திட்டம் (Ambani’s Vantara Animal Sanctuary) குறித்து ரிலையன்ஸ் அறக்கட்டளையின் இயக்குநர் ஆனந்த் அம்பானி சொல்லும்போது, “இந்த வந்தாரா திட்டம் என்னுடைய கனவுத் திட்டம் மற்றும் என்னுடைய ஆசை ஆகும். இந்த வனவிலங்கு மீட்பு மையம் ஆனது கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தபோது தொடங்கப்பட்டது. யானைகளை 2008-ம் ஆண்டு முதலே மீட்டு வருகிறது. இங்குள்ள மருத்துவமனையில் விலங்குகளுக்குச் செயற்கை கருவிகள் (Prosthetics) வைக்கப்படுகிறது. கூடிய விரைவில் இந்த வந்தாரா உயிரியல் பூங்கா பொதுமக்களுக்காக திறக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார். ஆனந்த் அம்பானியின் இந்த பேச்சுக்கு பல ஆதரவுகளும் மற்றும் அதேசமயம் எதிர்ப்புகளும் என மாறி மாறி இணையதளத்தில் கருத்துக்கள் குவிந்து கொண்டிருக்கின்றன.

Latest Slideshows

Leave a Reply