Ambati Rayudu Joins Mumbai Indians : மும்பை அணியில் இணைந்த அம்பத்தி ராயுடு...

Ambati Rayudu Joins Mumbai Indians - இன்டர்நேஷனல் டி20 லீக் :

Ambati Rayudu Joins Mumbai Indians : ஐபிஎல் தொடரை போன்றே இன்டர்நேஷனல் டி20 லீக் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணிக்காக சென்னை அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் ராயுடு தேர்வு (Ambati Rayudu Joins Mumbai Indians) செய்யப்பட்டுள்ளார். ஐபிஎல் தொடர்களில் எதிரிகளாக கருதப்படும் சென்னை மற்றும் மும்பை அணிகளில் விளையாடிய சில வீரர்கள் அவ்வப்போது மாறுவதுண்டு. ஏற்கனவே இந்த வகையில் ஹர்பஜன் சிங், பிராவோ மற்றும் அம்பத்தி ராயுடு ஆகியோர் இரு அணிகளிலும் விளையாடி உள்ளார்கள். இவர்களில் அம்பத்தி ராயுடு மிகவும் ஸ்பெஷல் ஆனவர். இரு அணிகளில் விளையாடிய போதும் சிறப்பான ஃபார்மில் இருந்தார்.

இரு அணிகளுக்குமே கோப்பையை வென்று கொடுத்துள்ளார். இதிலும் முக்கியமாக அவர் சென்னை அணிக்கு வந்த பின்னரே ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். சென்னை அணியும் ராயுடு அவர்களுக்கு மிகவும் சப்போர்ட் ஆக இருந்துள்ளது. அவர் இந்த வருடம் நடந்த ஐபிஎல் தொடரில் கோப்பை வென்ற பிறகு தனது ஓய்வு அறிவித்தார். தோனி அவர் கையாலயே அணிக்கு கோப்பையை வாங்கி கொடுத்தார்.

சர்வதேச தொடரிலிருந்து ஓய்வை அறிவித்த ராயுடு ஏற்கனவே தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் லீக் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறார். இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டு வரும் டி20 லீக் தொடரிலும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஒப்பந்தம் (Ambati Rayudu Joins Mumbai Indians) செய்யப்பட்டுள்ள இவர் தற்போது மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைய உள்ளார். அவர் கடந்த 2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு நீண்ட காலத்திற்கு பிறகு மீண்டும் மும்பை அணியில் இணைய உள்ளார். இந்த அணியில் ஏற்கனவே பிராவோ இருக்கிறார். மும்பை அணி வீரர் பொல்லார்ட் இந்த அணிக்கு தலைமை தாங்க இருக்கிறார்.

அதிகரித்து வரும் எதிர்பார்ப்பு :

இது மட்டுமல்லாமல் இங்கிலாந்து அணியின் நட்சத்திர பவுலர் ஜேம்ஸ் ஆண்டர்சன் அவர்களும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனால் இந்த லீக் தொடருக்கு எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

Latest Slideshows

Leave a Reply