Ambedkar Jayanti 2023: டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை

விடுதலை இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும், நமது நாடு முன்னேற்ற பாதையில் செல்வதற்கு இந்திய அரசியல் அமைப்பு சட்டங்கள் மிகவும் முக்கியம் என்று உணரவைத்தவர் அம்பேத்கர் ஆவார். ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காக போராடிய தலைவர்களில் அம்பேத்கர் மிகவும் முக்கியமான தலைவர் ஆவார். “தீண்டாமை” என்னும் கொடிய நோயிலிருந்து வெளிவந்து அனைவரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்று நினைத்த அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பற்றி தற்போது காணலாம்.

அம்பேத்கரின் பிறப்பு:-

அம்பேத்கர் மத்திய பிரதேசத்தில் உள்ள மாவ் என்னும் ஊரில் 1891 ஆம் ஆண்டும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி பிறந்தார். இவரின் தந்தை ராம்ஜி மாலோஜி சக்பால் தயார் பீமாபாயிக்கு குழந்தையாக பிறந்தார். இவரின் தந்தை ராணுவ பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

அம்பேத்கரின் ஆரம்ப வாழ்க்கையும் பள்ளி படிப்பும்:-

அம்பேத்கர் ‘மகர்’ என்னும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்தார். இவர் சாத்தாராவில் உள்ள பள்ளியில் தனது கல்வியை தொடர்ந்தார். பள்ளியில் படிக்கும் போது தாழ்த்தப்பட்ட இனத்தவர் என்பதற்காக இவரை மற்ற மாணவர்களுடன் ஒன்றாக அமரக்கூடாது, அனைவரும் நீர் அருந்தும் பாத்திரத்தில் நீர் அருந்தக்கூடாது, மண் பானையில் தண்ணிர் குடிக்க வேண்டும்.

மற்ற மாணவர்களுடன் விளையாடக்கூடாது என பல துன்பங்களையும், துயரங்களையும் அனுபவித்தார். இந்த நிலையில் “மகாதேவ அம்பேத்கர்” என்ற பிராமண ஆசிரியர் அம்பேத்கருக்கு உதவியாக இருந்தார். அவர் மீது அன்பும், அக்கறையும் கொண்டவராக விளங்கினார். அந்த ஆசிரியர் மீது உள்ள அன்பை வெளிப்டுத்தும் விதமாக தன்னுடைய பெற்றோர் வைத்த பீம்ராவ் ராம்ஜி என்ற பெயருக்கு பின்னால் தன்னுடைய ஆசிரியர் பெயரான ‘அம்பேத்கர்’ என்பதை சேர்த்துக் கொண்டார். அன்று முதல் அவருக்கு “பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்” என்ற பெயர் கிடைத்தது.

தந்தையின் வேலை காரணமாக இவருடைய குடும்பம் 1904 ஆம் ஆண்டு மும்பைக்கு குடி பெயர்ந்தனர். அங்கு ‘ ‘எல்பின்ஸ்டன்’ பள்ளியில் தனது பள்ளி படிப்பை 1907 ஆம் ஆண்டு முடித்தார். அதன் பிறகு பரோடா மன்னரின் பொருள் உதவியோடு மும்பை பல்கலை கழகத்தில் இளங்கலை படிப்பை தொடர்ந்த அவர் 1912 ஆம் ஆண்டு அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்றார்.

உயர் கல்விக்காக அமெரிக்க பயணம்:-

பரோடா மன்னர் அம்பேத்கரை சந்தித்து அவரின் கஷ்டங்களை அறிந்து அம்பேத்கரின் கல்வியை மேம்படுத்துவதற்காக வெளிநாட்டு படிப்பிற்கு உதவினார். இந்த நிலையில் அமெரிக்கா சென்று முதுகலை படிப்பிற்காக கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம், அரசியல், தத்துவம், சமூகவியல் மற்றும் சட்டம் போன்ற படிப்புகளை முடித்து தனது முதுகலை படிப்பை முடித்தார். அதன் பிறகு “இந்திய லாப்பங்கு ஒரு வரலற்றுப் பகுப்பாய்வு என்ற ஆய்வுக்கு கொலம்பியா பல்கலைக்கழகம் அம்பேத்கருக்கு “டாக்டர் பட்டம்” வழங்கியது.

அம்பேத்கரின் சமூகப்பணி:-

1923 ஆம் ஆண்டு முதுகலை படிப்பை முடித்து இந்தியா திரும்பிய அம்பேத்கர் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக அமைப்பிலும் பொருளாதாரத்திலும் நிலை மாற வேண்டும் என்பதற்காக பல போராட்டங்களை மேற்கொண்டார். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக “பஹிஸ்கிருத ஹதகாரிணி சபா” என்ற அமைப்பை ஏற்படுத்தினார். இதன் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி மற்றும் சமுதாய உரிமைக்காக போராடினர். தீண்டாமை மற்றும் சாதி ஒழிப்பிற்காக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். லண்டன் சென்று இரண்டாம் வட்ட மேசை மாநாட்டில் கலந்துகொண்டு ‘இரட்டை வாக்குரிமை’ என்ற சட்டத்தினை பெற்றார்.

அரசியல் அமைப்பில் அம்பேத்கரின் பங்கு:-

1947 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியா விடுதலை பெற்ற பிறகு, காங்கிரஸ் அரசு அம்பேத்கரை சட்ட அமைச்சராக பதவி ஏற்கும் படி அழைத்தது. அதன் பிறகு இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும் பொறுப்பேற்றார். அதன்பிறகு அவரால் எழுதப்பட்ட சட்டங்கள் அமைத்தும் ‘மிகச்சிறந்த சமூக ஆவணம்’ என்றுபோற்றப்பட்டது.

இறப்பு:-

அம்பேத்கர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு 1955 ல் உடல் நலம் மோசமடைய தொடங்கியது. அதன் பிறகு பார்வையற்று படுத்த படுக்கையாகவே இருந்தார். தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தன்னுடைய வாழ்க்கையை அர்பணித்த அம்பேத்கர் 1956 ஆம் ஆண்டு, டிசம்பர் 6 ஆம் நாள் அவருடைய இல்லத்தில் உறங்கிக்கொண்டிருக்கும் போழுதே உயிர் நீத்தார். இவரின் இறப்பிற்கு பிறகு “பாரத ரத்னா விருது” 1990 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

Latest Slideshows

Leave a Reply