Amitabh Bachchan In Thalaivar 170: 32 வருடங்களுக்கு பிறகு சூப்பர் ஸ்டாருடன் இணையும் அமிதாப்பச்சன்

தலைவர் 170 படத்தில் 32 வருடங்களுக்கு பிறகு சூப்பர் ஸ்டாருடன் இணையும் அமிதாப்பச்சன் வெளியான புதிய தகவல்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது படத்தின் மற்ற பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் இப்படத்தில் ரம்யாகிருஷ்னன், தமன்னா, சிவராஜ்குமார், சுனில், மோகன்லால், வசந்த் ரவி, ரெடின் கிங்ஸ்லீ ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு இசைமைப்பாளர் அனிருத் இசைமைக்கிறார். பான் இந்தியா படமாக உருவாகி வரும் இந்தப்படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனால்அனைவரின் எதிர்பார்ப்பும் தற்போது ரஜினியும், இயக்குனர் டி.ஜெ. ஞானவேலும் இணையும் ரஜினியின் 170வது படமாக உருவாகும் இதற்கு பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க உள்ளார். இப்படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் விக்ரமிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அதற்கு விக்ரம் நடிக்க மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

தற்போது ரஜினிக்கு ஜோடியாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியான நிலையில், ரஜினிகாந்த் படத்தில் நடிக்க அமிதாப் பச்சன் பச்சைக்கொடி காட்டிவிட்டதாகவும் கூறப்படுகிறது. ரஜினியின் அனுமதியுடன் மும்பை சென்று அமிதாப்பிடம் கதை சொல்லப்பட்ட நிலையில் அமிதாப் இந்தப் படத்தில் நடிக்க மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார் என்று தமிழ் திரையுலகில் ஒரு செய்தி பரவி வருகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது. ரஜினி-அமிதாப் இணைவது நிச்சயம் ஆனால், கிட்டத்தட்ட 32 வருடங்களுக்கு பிறகு இந்த கூட்டணி இணைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 1991ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான ‘ஹூம்’ படத்தில் அமிதாப் பச்சனுடன் ரஜினிகாந்த் நடித்திருந்தார். அதன் பிறகு இந்த கூட்டணி இணையவே இல்லை. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply