Amudham And Co-op Sector Planning Mega Stores : மளிகையில் இருந்து மருந்து வரை விற்பனை செய்யும் 'மெகா ஸ்டோர்'

Amudham And Co-op Sector Planning Mega Stores :

வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களும் விற்பனை செய்யும் வகையில் கூட்டுறவுத்துறை மற்றும் அமுதம் ஆனது மாவட்ட வாரியாக ‘மெகா ஸ்டோர்கள்’ திறக்க (Amudham And Co-op Sector Planning Mega Stores) திட்டமிட்டுள்ளன.

மாவட்ட வாரியாக மெகா ஸ்டோர்களை திறக்கும் திட்டம் :

சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கூட்டுறவு சங்கங்கள் ஆனது கூட்டுறவு துறையின் கீழ் 300க்கும் மேற்பட்ட பல்பொருள் அங்காடிகள் மற்றும் கூட்டுறவு பண்டக சாலைகள் மற்றும் காய்கறி கடைகளை நடத்தி வருகின்றன. அதேபோல உணவுத் துறையின் கீழ் இயங்குன்ற நுகர்பொருள் வாணிப கழகம் ஆனது அமுதம் என்ற பெயரில் பல்பொருள் அங்காடியை நடத்தி வருகிறது. பல்வேறு தனியார் நிறுவனங்கள் ஆனது சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களில் மளிகை, வீட்டு உபயோக பொருட்கள் என அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில் விற்பனை செய்யும் வகையில் பெரிய ஸ்டோர்களை நடத்தி வருகின்றன.

இந்நிலையில் இதேபோல், கூட்டுறவுத்துறையும் மற்றும் அமுதமும் வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களும் விற்பனை செய்யும் வகையில் மாவட்ட வாரியாக மெகா ஸ்டோர்களை (Amudham And Co-op Sector Planning Mega Stores) திறக்க திட்டமிட்டுள்ளன. கூட்டுறவு துறை ஆனது ஒரே இடத்தில் மகளிர் குழு தயாரிக்கும் பொருட்கள் மற்றும் மளிகை என அனைத்து வகையான பொருட்களும் மிகக் குறைந்த விலைக்கு கிடைக்கும் வகையில், மாவட்டத்துக்கு தலா ஒரு மெகா ஸ்டோரை தொடங்க முடிவு செய்துள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த மெகா ஸ்டோர்கள் மூலமாக கூட்டுறவு சங்கங்களின் தயாரிப்புகள், மகளிர் சுய உதவி குழு தயாரிக்கும் பொருட்கள், மலைவாழ் மக்கள் தயாரிக்கும் பொருட்கள் மற்றும் மருந்து பொருட்கள் போன்றவை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. கூட்டுறவு மற்றும் உணவுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், “இந்த மெகா ஸ்டோர்கள் மூலமாக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் காய்கறிகள், பழங்கள் மற்றும் அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படும் அனைத்து வகையான பொருட்களையும் விற்பனை செய்யும் விதத்தில் நடவடிக்கை ஆனது விரைவில் எடுக்கப்படும். மேலும் ஏற்கனவே கூட்டுறவுத்துறை மூலம் லாபம் ஈட்டாமல் நஷ்டத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவு கடைகளும் இந்த மெகா ஸ்டோர்களுடன் ஒருங்கிணைக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

Latest Slideshows

Leave a Reply