Andhagan Box Office : அந்தகன் திரைப்படத்தின் வசூல் நிலவரம்

தியாகராஜன் இயக்கத்தில் பிரசாந்த் ஹீரோவாக நடித்துள்ள அந்தகன் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தின் வசூல் நிலவரத்தை (Andhagan Box Office) தற்போது காணலாம். டாப் ஸ்டார் பிரஷாந்த் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஹீரோவாக நடிக்கும் படம் அந்தகன் ஆகும். இப்படத்தை அவரது தந்தை தியாகராஜன் இயக்கி உள்ளார். இந்த படத்தில் பிரசாந்துடன் சிம்ரன், பிரியா ஆனந்த், கே.எஸ்.ரவிக்குமார், வனிதா விஜயகுமார், சமுத்திரக்கனி, யோகி பாபு, நவசர நாயகன் கார்த்திக் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசைமைத்துள்ளார். பாலிவுட்டில் ஆயுஷ்மான் குரானாவின் பிளாக்பஸ்டர் ஹிட் படமான அந்தாதூண் திரைப்படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இந்தப் படத்தை இந்தியில் ஸ்ரீராம் ராகவன் என்பவர் இயக்கி இருந்தார். இந்தப் படம் பாலிவுட்டில் சக்கைபோடு போட்டதோடு, படத்திற்கு சிறந்த திரைக்கதை, சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த நடிகர் என மூன்று தேசிய விருதுகளை வென்றது.

படத்தின் மையக்கருத்து :

பாரி முகலன் (கெளரவ் கலை) தனது ஒட்டுமொத்த பள்ளிக்கே செல்ல பிள்ளையாக இருக்கிறான். கால்பந்து விளையாட்டில் சிறந்து விளங்கி தனது பள்ளிக்கு பெருமை சேர்ப்பதால், அவன் செய்யும் எந்த சேட்டையும் ஆசிரியர்களால் கண்டிக்கப்படுவதில்லை. இந்த நேரத்தில் சபரி (பிரவீன் கிஷோர்) பள்ளிக்கு புதியதாக வந்து சேர்கிறார். பாரி கால்பந்து விளையாடுவது போல சபரி செஸ் விளையாடக்கூடியவன். அதே நேரத்தில் ஒரு ஓவியனாக வேண்டும் என்பது தான் அவன் ஆசை. சபரி வந்த பிறகு, ஆசிரியர்களின் கவனம் அவனிடமிருந்து விலகுவது பாரிக்கு பிடிக்கவில்லை. இதனால் சபரியை அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளார்.

மோதலாகத் தொடங்கும் இவ்விருவரின் சந்திப்பு, மெல்ல நட்பாக மாறுகிறது. ஆனால் இடையில் நிகழும் ஒரு விபத்தில் சபரியின் உயிரைக் காப்பாற்ற முயன்ற பாரி இறந்துவிடுகிறார். தன் உயிரைக் காப்பாற்ற ஒருவரின் உயிரை இழந்த குற்ற உணர்ச்சியில் சபரி மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார். தன் குற்றத்தை போக்க, தனக்கு பிடித்த ஓவியம் முதல் சதுரங்க விளையாட்டு வரை அனைத்தையும் கைவிட்டு பாரியின் கனவுகளை சுமக்கத் தொடங்குகிறான். அதே பள்ளியில் வந்து சேர்கிறாள் பிரவீனா. இறந்த பாரியின் இதய தானத்தால் உயிர்பிழைத்தவர் பிரவீனா (எஸ்தர் அனில்). சபரி தனது குற்ற உணர்ச்சியில் இருந்து விடுபட்டானா, பிரவீனா இதில் சபரிக்கு உதவுகிறாளா என்பதுதான் படத்தின் கதையாகும்.

Andhagan Box Office :

கடைசியாக பிரஷாந்த் நடித்த மூன்று படங்களின் வாழ்நாள் வசூலை விட அந்தகன் முதல் நாளில் அதிகம் வசூலித்ததாக கூறப்படுகிறது. முதல் நாளில் ரூ.65 லட்சத்தை வசூலித்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் குறித்து படக்குழு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை. அதைத் தொடர்ந்து இரண்டாவது நாளான சனிக்கிழமை 1.19 கோடி வசூலித்துள்ளது. இதையடுத்து நேற்று விடுமுறை என்பதால் படத்தின் வசூல் கணிசமாக அதிகரித்து மூன்றாம் நாள் வசூல் 1.15 கோடியாக உள்ளது. மொத்தத்தில் அந்தகன் முதல் மூன்று நாட்களில் 2.99 கோடிகளை (Andhagan Box Office) வசூலித்துள்ளது. இதனால், டாப் ஸ்டார் பிரசாந்த் கூறியது போல் கம்பேக் கொடுத்திருப்பதை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருவதால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply