Andhagan Song Released By Vijay : பிரசாந்தின் 'அந்தகன்' பாடலை வெளியிட்ட விஜய்

பிரசாந்த் 90s-களில் முன்னணி நட்சத்திரமாக இருந்தவர். இப்போது டாப் லெவலில் இருக்கும் விஜய், அஜித், விக்ரம், சூர்யா போன்றோரைவிட பிரசாந்திற்கு வரவேற்பு இருந்தது. ஆண் ரசிகர்களை மட்டுமின்றி பெண் ரசிகர்களையும் கவர்ந்தார். ஷங்கர், மணிரத்னம் போன்ற முன்னணி இயக்குனர்களிடமும் பணியாற்றினார். சில காரணங்களால் சினிமாவில் இருந்து காணாமல் போன அவர், பல வருடங்கள் கழித்து ‘அந்தகன்’ படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்நிலையில், படத்தின் முதல் சிங்கிள் பாடலை (Andhagan Song Released By Vijay) விஜய் வெளியிட்டுள்ளார்.

நடிகர் பிரசாந்த் :

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் நடிகர் பிரசாந்த். வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். முதல் படமே மெகா ஹிட்டானது. அழகும் திறமையும் ஒன்றாக இருந்ததால், முதல் படமே மெகா ஹிட்டானதால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்தது. அதை சரியாக பயன்படுத்திய அவருக்கு தொட்டதெல்லாம் ஹிட் படங்களாக அமைந்தன. இதனால் பல ஊர்களில் பிரசாந்திற்கு ரசிகர் மன்றங்கள் உருவாகத் தொடங்கின. பிறகு பாலு மகேந்திராவின் இயக்கத்தில் நடித்தார். அதன் பிறகு பிரசாந்த் மணிரத்னம் இயக்கத்தில் திருடா திருடா என்ற வெற்றிப் படத்தில் நடித்தார். அதன் பிறகு தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்தார்.

தற்போது டாப் ஸ்டார்களாக இருக்கும் விஜய் மற்றும் அஜித்தை விட 90s-களில் பிரசாந்த் உயர்ந்தவர். இன்னும் சொல்லப்போனால், அவருக்கு நேரமும் சூழ்நிலையும் சரியாக இருந்திருந்தால், இன்று விஜய், அஜித் இருவருடைய இடத்தையும் அலங்கரித்திருப்பார். இப்படி உச்சத்தில் சென்றுகொண்டிருந்த பிரசாந்திற்கு சில சறுக்கல்கள் ஏற்பட்டன. அவருக்கும், அவர் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையே அதற்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது. மேலும் அந்த பிரச்சனையில் கவனம் செலுத்தியதால் சினிமாவில் கவனம் செலுத்த முடியாமல் வாய்ப்புகள் குறைந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. மனைவி பிரச்சனை மட்டுமின்றி, தந்தையின் தலையீட்டால் பாதியிலேயே காணாமல் போனார் பிரசாந்த் என்று திரையுலகில் பேசப்படுகிறது.

ரீ என்ட்ரி :

பல வருடங்களுக்கு பிறகு ‘அந்தகன்’ படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் பிரசாந்த். இப்படம் ஹிந்தியில் வெளியான அந்தாதூன் படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தகன் படத்தில் பிரசாந்துடன் நவரச நாயகன் கார்த்திக், சிம்ரன், பிரியா ஆனந்த், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை நடிகரும் பிரசாந்தின் தந்தையுமான தியாகராஜன் இயக்குகிறார். படப்பிடிப்பு முடிந்துவிட்டாலும் படம் இன்னும் வெளியாகவில்லை. அந்தகன் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Andhagan Song Released By Vijay :

இந்நிலையில் அந்தகன் படத்தின் முதல் சிங்கிள் பாடல் நேற்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நடிகர் விஜய் பாடலை (Andhagan Song Released By Vijay) வெளியிட்டார். இந்தப் பாடலை அனிருத்தும், விஜய் சேதுபதியும் இணைந்து பாடியுள்ளனர். மேலும் அந்த லிரிக்கல் வீடியோவில் பிரசாந்தின் நடன அசைவுகள் பட்டையை கிளப்புவதாக பத்திரிக்கையாளர்கள் கூறுகின்றனர். முதல் சிங்கிள் வெளியீட்டு விழா மட்டுமின்றி, சென்னை பிரசாந்த் ஸ்டுடியோவில் அந்தகன் படத்தின் திரையிடல் பத்திரிகையாளர்களுக்காக நடத்தப்பட்டது.

Latest Slideshows

Leave a Reply