Andhra Auto Driver Makes Electric Vehicle
பீச்சுபள்ளி என்பவர் ஆந்திராவின் கர்னூலில் உள்ள உண்டவல்லி மண்டல் பொன்குரு கிராமத்தைச் சேர்ந்தவர். ஒரு நடுத்தரக் குடும்பத் தில் பிறந்து வளர்ந்தவர். அவர் சிறுவயதிலிருந்தே கார் மீது ஆசை கொண்டு சொந்தமாக ஒரு கார் வைத்திருக்க விரும்பினார். ஆனால் குடும்பத்தின் சூழ்நிலை மற்றும் குறைந்த நிதி, வளங்கள் போன்ற காரணங்களால் அவரது ஆசை ஒருபோதும் நிறைவேறாது என்பது போலவே தொடர்ந்தது. இருப்பினும், அவரது அடங்காத ஆசை அவரை ஆட்டுவித்தது.
முதல் வெற்றி தந்த உற்சாகம்
ஆட்டோ ஓட்டுநராக தொடர்ந்த அவரது வாழ்வில் தனது டீசல் ஆட்டோவை எலக்ட்ரிக்கல் ஆட்டோவாக மாற்றும் எண்ணம் ஏற்பட்டது. தானே முயன்று தனது சொந்த முயற்சியால் டீசல் ஆட்டோவை எலக்ட்ரிக்கல் ஆட்டோவாக மாற்றி வெற்றி பெற்றார். அந்த முதல் வெற்றி தந்த உற்சாகத்தில் இரு மடங்கு முயற்சி மற்றும் உற்சாகத்துடன், ஒரே நேரத்தில் பேட்டரிகளில் இயங்கும் ஒரு மின்சார காரை உருவாக்கினார். பீச்சுபள்ளி தனது வசம் உள்ள குறைந்த வளங்களைக் கொண்டு ஒரு அற்புதமான மின்சார காரை உருவாக்கினார். அவரது நிதி உதவியின்மையை அவரது அடங்காத ஆசை மற்றும் தளராத உறுதி ஆனது வென்றது.
Hyderabad Carnival Exhibition-ல் காட்சிப்படுத்தப்பட்டது
ஒருமுறை 1,20,000 ரூபாய்க்கு electric charge செய்தால் 100 கிலோமீட்டர் தூரம் ஓடும் திறன் கொண்ட அவரது அவரது புதிய கண்டுபிடிப்பு ஆனது உள்ளூர் பொன்குரு கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது கண்டுபிடிப்புகள் பற்றிய விவரம் அந்த மாவட்டம் முழுவதும் பரவியது. பீச்சுபள்ளியின் கார் ஆனது சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற கார்னிவல் நிகழ்ச்சியில் ( i.e., Carnival Exhibition) காட்சிப்படுத்தப்பட்டது.
இப்போது அந்த சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அவர் தயாரித்த காரைப் பார்க்க கூடுகின்றனர். சுமார் 5 குவிண்டால் வரை எடையை சுமக்கும் திறன் கொண்ட அவரது மின்சார வாகனம் விவசாயப் பணிகளுக்குப் பயன்படுத்த மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள சாலைகளில் பயணிக்க மிகவும் உகந்ததாக உள்ளது.
டெஸ்லா போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் மில்லியன் கணக்கான டாலர்களை செலவழித்து புதிய முயற்சி மற்றும் மாற்றங்களை மேற்கொள்ளும்போது ஒரு கிராமத்து சாமானியர் தனது வசம் உள்ள குறைந்த நிதி, வளங்களைக் கொண்டு ஒரு அற்புதமான மின்சார காரை உருவாக்கியுள்ளார். அவரது அடங்காத ஆசை, அவரது உறுதியான கனவு மற்றும் அவரது தளராத சொந்த முயற்சி அவருக்கு வெற்றி பெற்று தந்தது. இப்போது அவரது கிராமம் மற்றும் மாவட்டத்தில் உள்ள பலருக்கு பீச்சுப்பள்ளி ஒரு உத்வேகமாக உள்ளார்.
வாழ்வில் உள்ள அனைத்து முரண்பாடுகளுக்கும் எதிராக வலுவான விருப்பமும் உறுதியும் ஒருவரின் கனவுகளை நிறைவேற்றும் மற்றும் வெற்றி பெற்று தரும் என்ற பழமொழியை நினைவூட்டுகிறது. ஒரு முடிவு இருந்தால் அதில் தெளிவு இருந்தால் அந்த வானம் வசமாகும், சமானியனின் கனவும் சரித்திரம் படைக்கும்.