Animal Fat In Tirupati Laddu : புனிதமாக கருதும் திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு

திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பும் மற்றும் தகாத பொருட்களும் சேர்க்கப்பட்டிருப்பது (Animal Fat In Tirupati Laddu) மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் உள்ள பிரசித்தி பெற்ற திருப்பதி கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில் மாட்டுக் கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் இருப்பதாக ஆய்வக அறிக்கை உறுதி செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் ஆனது வெளியாகி உள்ளது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்கள் ஜெகன் மோகனின் அரசு ஆனது திருப்பதி கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில், நெய்க்குப் பதிலாக விலங்குகளின் கொழுப்பை கலந்ததாக குற்றம் சாட்டியிருந்தார். முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் குற்றஞ்சாட்டை தொடர்ந்து திருப்பதி லட்டானது ஆய்விற்கு உட்படுத்தப்பட்டது. தற்போது திருப்பதி கோவில் லட்டில் பன்றி மற்றும் மாட்டுக் கொழுப்பு சேர்க்கப்பட்டிருந்தது உண்மைதான் என்ற அதிர்ச்சியான தகவல் ஆனது ஆய்வில் வெளியாகி உள்ளது.

Animal Fat In Tirupati Laddu - கால்நடை மற்றும் உணவியல் பகுப்பாய்வு மற்றும் கற்றல் மையத்தின் (NDDB CALF) அறிக்கை (Report Of NDDB CALF) :

NDDB CALF ஆனது கால்நடை மற்றும் உணவியல் பகுப்பாய்வு மற்றும் கற்றல் மையம் ஆகும். இந்த மையம் ஆனது கால்நடை தீவனம் மற்றும் பால், பால் பொருட்களை சோதனை செய்வதில் கவனம் செலுத்தி வருகிறது. தனியார் ஆய்வகமான கால்நடை மற்றும் உணவியல் பகுப்பாய்வு மற்றும் கற்றல் மையம் (NDDB CALF) அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. அந்த அறிக்கையின்படி, திருப்பதி கோவிலில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படுகின்ற நெய்யின் மாதிரிகளில் பாமாயில், மீன் எண்ணெய், மாட்டுக் கொழுப்பு மற்றும் பன்றிக்கொழுப்பு உள்ளிட்ட கொழுப்புகள் பயன்படுத்தப்பட்டு  இருப்பது தெரியவந்துள்ளது.

தேசிய பால்வள மேம்பாட்டு நிறுவனம் திருப்பதி லட்டு குறித்து அறிக்கை :

தேசிய பால்வள மேம்பாட்டு நிறுவனம் செய்த பரிசோதனையில் திருப்பதி கோவில் லட்டில் பன்றிக் கொழுப்பு மற்றும் மாட்டுக் கொழுப்பு உள்ளிட்ட விலங்குகளின் கொழுப்பு சேர்க்கப்பட்டிருப்பது (Animal Fat In Tirupati Laddu) உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மீன் எண்ணெய், சோயாபீன் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் உள்ளிட்டவற்றின் கொழுப்புகளும் திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரசாதமான லட்டில் இருந்ததாக தேசிய பால்வள மேம்பாட்டு நிறுவனம் செய்த ஆய்வில் தெரியவந்துள்ளது. திருப்பதி கோவில் பக்தர்கள் மத்தியில் இப்படியான அறிக்கையானது வெளியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Latest Slideshows

Leave a Reply