Animal Movie Review : அனிமல் திரைப்படத்தின் திரை விமர்சனம்

ரன்பீர் கபூர் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள அனிமல் படத்தின் திரை விமர்சனத்தை (Animal Movie Review) தற்போது பார்க்கலாம். ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி தியோல் நடித்துள்ள அனிமல் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. அமித் ராய் ஒளிப்பதி செய்து அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை டி சீரிஸ் பிலிம்ஸ், பத்ரகாளி பிக்சர்ஸ் மற்றும் இனி ஒன் ஸ்டுடியோஸ் இணைந்து இந்த தயாரித்துள்ளது. தற்போது அனிமல் திரைப்படத்தின் முழு விமர்சனத்தை (Animal Movie Review) இங்கே காணலாம்.

படத்தின் மையக்கருத்து :

இந்த படத்தில் மகனாக ரன்வீர் கபூரும், தந்தையாக அனில் கபூரும் நடித்துள்ளனர். சிறுவயதிலிருந்தே, இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபரான தனது தந்தையின் அன்பிற்காக மட்டுமே ஏங்கும் கோபமான இளைஞனாக விஜய் (ரன்பீர் சிங்) வளர்கிறார். தன் தந்தை எவ்வளவுதான் காயப்படுத்தியிருந்தாலும், அவர் உயிருக்கு ஆபத்து ஏற்படும் போது எதிரிகளைக் கண்டுபிடித்து பழிவாங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான இந்த சிக்கலான உறவு நிலையை, ரத்த நெடியை பார்வையாளர்கள் உணரும் அளவுக்கு கேங்ஸ்டர் படமாக இயக்கியிருக்கிறார் இயக்குநர்.

அனிமல் திரைப்படத்தை ஒரு பொதுவான கேங்ஸ்டர் படம் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் அதற்கான கதைக்களம் இந்த படத்தில் இல்லை. பல வருடங்களாக இரு குடும்பங்களுக்கு இடையே நடக்கும் மோதலும், அதனால் ஏற்படும் பகைமையும் தான் இத்தகைய அதீத வன்முறை நிறைந்த படத்திற்கு அடிப்படையாக உள்ளது. தந்தை மீது மிகுந்த பாசம் கொண்ட மகன், தந்தையின் அன்பையும் அங்கீகாரத்தையும் பெற எந்த எல்லைக்கும் செல்வான் என்பதே அனிமல் படத்தின் கதையாகும். 

Animal Movie Review :

Animal Movie Review : சுருக்கமாகச் சொன்னால், ரத்த அபிஷேகம் செய்து மனிதனின் அடையாளத்தைக் கொண்டாடும் படம் தான் அனிமல். படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை ஆண் மையச் சிந்தனையே ஆதிக்கம் செலுத்துகிறது. ஒவ்வொரு வரியும், ஒவ்வொரு நகைச்சுவையும், ஒவ்வொரு காட்சி என தன் விளக்கங்களை படம் முழுவதும் திணித்திருக்கிறார் இயக்குனர். ரன்பீர் கபூரின் நடிப்பு ஒன்றே மூன்றரை மணி நேரம் கதையை நடத்தும் ஒரே ஆயுதமாக இருக்கிறது. ரன்பீர் கபூரின் முந்தைய படங்களில் நடிப்பை மறக்கும் வகையில் இந்த கதாபாத்திரத்தை நிஜமாக்கியது. ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி தியோல் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர். பல்வேறு இசையமைப்பாளர்கள் ஒன்றிணைந்து வித்தியாசமான ஆல்பத்தை வழங்கியுள்ளனர். நேர்த்தியாக உருவாக்கப்பட்ட ஆக்‌ஷன் காட்சிகள் மிகச்சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளன. இன்னும் சொல்லப் போனால், இந்த வருடம் வெளியான ஆக்‌ஷன் படங்களை விட அனிமல் படத்தின் ஆக்‌ஷன் காட்சிகள் (Animal Movie Review) சிறப்பாக உள்ளது.

Latest Slideshows

Leave a Reply