Anna University Drone Technology: சென்னை அண்ணா பல்கலைக்கழக CASR Drone தொழில்நுட்பம் தொடர்பான காப்புரிமையை பெற்றுள்ளது.

Anna University holds a patent for drone technology

Anna University Drone Technology : சென்னை அண்ணா பல்கலையிக்கழக ஏரோஸ்பேஸ் ஆய்வு மையம் CASR Drone தொழில்நுட்பம் தொடர்பான காப்புரிமையை பெற்றுள்ளது. மத்திய அரசு அண்ணா பல்கலை ஆய்வு மையத்திற்கு ட்ரோன் நுட்பம் தொடர்பான காப்புரிமையை வழங்கி சிறப்பித்துள்ளது. இந்திய காப்புரிமை அலுவலகம் ஆனது அறிவுசார் சொத்து இந்தியா மற்றும் மினி ஆளில்லா வான்வழி வாகனங்களுக்கான வான்வழி-அடிப்படையிலான அறிவார்ந்த தன்னாட்சி தரையிறங்கும் அமைப்புக்கான காப்புரிமையை வழங்கியுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள ஏரோஸ்பேஸ் ஆய்வு மையம் (CASR), ஆனது ட்ரோன் தொழில்நுட்பம் தொடர்பான இந்த  காப்புரிமையைப் பெற்றுள்ளது. இந்த காப்புரிமை ஆனது 20 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த காப்புரிமை ஆனது ட்ரோன் தொழில்நுட்பத்தில் முக்கிய மைல்கல்லாக அமைகிறது.

நிலத்தில் பொருட்கள் நிலை தொடர்பான நுட்பத்திற்காக இந்த காப்புரிமை ஆனது அளிக்கப்பட்டுள்ளது.

  • Anna University Drone Technology : அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த  மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆராய்ச்சியாளர்கள் இந்த புதிய ஆளில்லா விமானத்தின் (ட்ரோனின்) சகாப்த தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர்.
  • இந்த புதிய அமைப்பு ட்ரோன்கள் ஆனது தரையிறங்க, விநியோகம் செய்ய மற்றும்  நட்பற்ற நிலப்பரப்பில் இருந்து சுமைகளை எடுக்க உதவும்.
  • இந்த தொழில்நுட்பத்தை டாக்டர்.கே.செந்தில்குமார், டாக்டர்.எஸ்.தாமரைசெல்வி, டாக்டர்.சி.யு.ஹரி மற்றும் ஆய்வு மாணவர்கள் கலைசெல்வன், வெங்கடேசன் ஆகியோர் அடங்கிய ஆய்வுக்குழு ஆனது உருவாக்கியுள்ளது.
  • இந்த ஆய்வுக்குழு ஆனது வழக்கமான மேப்பிங் மற்றும் கண்காணிப்பு சேவையை கடந்து ட்ரோன் தொழில்நுட்பத்தின் மூலம் சமூகத்தில் எப்படி தாக்கத்தை ஏற்படுத்தலாம் எனும் கேள்வியுடன் ஆய்வைத் துவங்கியது.
  • இந்த ஆய்வு ஆனது தொலைவில் இருந்து நிகழ் நேரத்தில் பொருட்களை உணர்தல் மற்றும் வகைப்படுத்தல் தொடர்பான நுப்டத்தை கண்டறிய வைத்தது.

AI மற்றும் M.L நுட்பம் ஆனது இந்த புதிய நுட்பத்தில் பயன்படுகிறது

  • இந்த அமைப்பு ஆனது வழக்கமான ட்ரோன் காமிராக்களுக்கு மாறாக, களத்தில் உள்ள கம்ப்யூட்டிங் திறனை, நிகழ் நேர பொருட்கள் உணர்தல் மற்றும் வகைப்படுத்தலுக்கு பயன்படுத்துகிறது.
  • AI மற்றும் M.L நுட்பம் ஆனது இதில் பயன்படுகிறது. இந்த AI மற்றும் M.L நுட்பம் ஆனது மேம்பட்ட அல்கோரிதம், முப்பரிமான மேட்ரிக்ஸ் மற்றும் ஏரியல் டிரயாங்குலேஷன் உள்ளிட்ட  நுட்பங்களை சிறப்பாக பயன்படுத்துகிறது.
  • இந்த புதிய நுட்பம்  ஆனது பாதுகாப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நல்ல பயன்பாடுகளை வழங்கும். இந்த புதிய நுட்பம்  ஆனது  பாதுகாப்புத்துறையில் குறிப்பாக  இலக்கு தாக்குதல், பாதுகாப்பு நடவடிக்கைகள்,  மற்றும் ட்ரோன் தாக்குதல் உள்ளிட்டவற்றுக்கு சிறப்பாக பயன்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த புதிய நுட்பம்  ஆனது சிவிலியன் துறையில் தேடல், பேரிடர் உதவி, மற்றும் சோதனை ஆகியவற்றுக்கு பயன்படும்.
  • இந்த காப்புரிமை ஆனது ஏரோஸ்பேஸ் துறையில் மையத்தின் ஆய்வு ஈடுபாடுகளுக்கான ஒரு வெற்றியாக அமைந்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply