Annamalai About Trisha Issue : த்ரிஷாவுக்காக காவல்துறைக்கு கோரிக்கை வைத்த அண்ணாமலை

நடிகை த்ரிஷா குறித்து சமீபகாலமாக பரவிவரும் செய்திகள் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து (Annamalai About Trisha Issue) தெரிவித்துள்ளார். சேலம் மாவட்ட அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் பொறுப்பு வகித்த ஏ.வி.ராஜு, சில வாரங்களுக்கு முன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். செய்தியாளர் சந்திப்பின் போது சேலம் மாவட்ட அதிமுக மற்றும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவர் விமர்சித்து பேசினார். அதில் கடந்த 2017ம் ஆண்டு கூவத்தூரில் நடந்த சம்பவங்களை கூறி பரபரப்பை கிளப்பினார். அப்போது நடிகை த்ரிஷா குறித்து எந்த ஆதாரமும் இல்லாமல் அருவருப்பான கருத்துக்களை தெரிவித்தார். நடிகர் கருணாஸ் மற்றும் திரையுலகினர் சில நடிகைகளின் பெயரை குறிப்பிடாமல் பேசினர்.

Annamalai About Trisha Issue - கோரிக்கை வைத்த அண்ணாமலை :

Annamalai About Trisha Issue : இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கோவையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது கருத்தை (Annamalai About Trisha Issue) தெரிவித்துள்ளார். அப்போது அவர், “கருத்து சுதந்திரம் என்ற பெயரில் நடிகை த்ரிஷாவை தவறாக பேசுவதை ஏற்க முடியாது. த்ரிஷாவை தவறாக பயன்படுத்தியவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் கூறினார். இந்த விஷயம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் ஏ.வி.ராஜு தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தார். தான் த்ரிஷாவின் பெயரைக் குறிப்பிடவில்லை என்றும், ஆனால் அவரை ஒரு முன்மாதிரியாகக் குறிப்பிடவே அவ்வாறு கூறினேன் என்று தெளிவற்ற விளக்கம் அளித்தார்.

இதுகுறித்து நடிகை த்ரிஷா தனது எக்ஸ் தள பக்கத்தில், “தன்னைப் பற்றிய அவதூறான தகவல்களுக்காக பிரபல மீடியாக்களிடம் 24 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நடிகை த்ரிஷா கூறியுள்ளார். ஏ.வி.ராஜு வீடியோவை எந்தெந்த தளங்களில் வெளியானதோ அதனை நீக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் அதில் குறிப்பிட்ட தொகையை 4 நாட்களுக்குள் மன உளைச்சலுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும். இல்லையெனில் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளதை பகிர்ந்துள்ளார்.

நடிகர் சங்க தலைவர் நாசர் கூறியதாவது :

இது தொடர்பாக நடிகர் சங்க தலைவர் நாசர் கூறும்போது, ​​”சகோதரி த்ரிஷாவும், அண்ணன் கருணாஸும் தற்போது பொது இணையதளங்களில் உள்ளனர். ஆதாரமற்ற, பொறுப்பற்ற, தரக்குறைவான, வக்கிரமான, பொய்யான கதை பரப்பப்பட்டு வருவதை தென்னிந்திய நடிகர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. திரையுலக பிரபலங்களை பற்றி அவதூறு பரப்பி சுயவிளம்பரம் தேடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மீண்டும் அனைவரையும் வெட்கித் தலைகுனிய வைக்கும் நிகழ்வு நிகழ்ந்துள்ளது. பொதுவாழ்க்கையில் இருக்கும் ஒருவர், திரையுலகிலும், பொது வெளியிலும் சுறுசுறுப்பாக இருக்கும் நடிகர் கருணாஸ் மீதும், தனது கடின உழைப்பாலும், திறமையாலும் முன்னணி நடிகையாக இருக்கும் த்ரிஷா மீதும், தனது அரசியல் சுயநலத்துக்காக இப்படி மோசமான அவதூறு பரப்புவது வேதனை அளிக்கிறது”  என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

Latest Slideshows

Leave a Reply