Annapoorani Box Office Collection :பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா?

அன்னபூரணி படத்தின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் (Annapoorani Box Office Collection) வெளியாகி அன்னபூரணி திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நயன்தாரா. அவர் விக்னேஷ் சிவனைக் காதலித்து திருமணம் செய்துகொண்டு அவருக்கு, உயிர் மற்றும் உலக் என்று இரு மகன்கள் உள்ளனர். குழந்தை இருந்தாலும் சினிமாவில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார் நயன். அந்த வகையில் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி ஆனார் அட்லீ. அதில் ஷாருக்கான் ஹீரோவாக நடித்திருந்தார். அந்தப் படத்தின் மூலம் இந்தியிலும் அறிமுகமானார் நயன். அங்கும் அவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இவரின் ஆக்‌ஷன் காட்சிகளை பார்த்த பாலிவுட் வட்டாரம் மேலும் சில படங்களில் நடிக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக ரன்வீர் சிங்குடன் அவர் நடிப்பார் என்பது உறுதியாகி இருப்பதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது.

அன்னபூரணி :

இதற்கிடையில் தமிழிலும் பிஸியாக இருக்கிறார். ஜெயம் ரவியின் நடித்த இறைவன் படம் தமிழில் கடைசி படமாக வெளியானது. அந்தப் படம் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. இந்தப் படம் தவிர அன்னபூரணி, மண்ணாங்கட்டி படங்களிலும் நயன் நடித்துள்ளார். அன்னபூரணி இவரது 75வது படமாகும். இப்படத்தை இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்த நிலேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ளார். நயன்தாராவுடன் கே.எஸ்.ரவிக்குமார், சத்யராஜ், ஜெய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவராக நடிக்கும் நயன், சமையல்காரராக ஆசைப்படுவதும், அதற்கு வரும் தடைகளையும் மற்றும் அதை நயன் சமாளிப்பதை வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

Annapoorani Box Office Collection :

நயன்தாராவின் 75வது படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்புடன் கடந்த 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் கூட்டம் வராது என படக்குழுவினர் அச்சத்தில் இருந்தனர். ஆனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைத் தவிர, முதல் நாள் ரசிகர்கள் கூட்டம் சொல்லிக்கொள்ளும்படி வந்தது. அதனால் படம் முதல் நாளில் 60 லட்சம் ரூபாய் வசூலித்ததாக கூறப்படுகிறது.  இரண்டாவது நாள் படம் 90 லட்சம் வரை வசூல் செய்துள்ளது. பாக்ஸ் ஆபிஸ் நிலவரபடி, முதல் இரண்டு நாட்களில் அன்னபூரணி ரூ.1.5 கோடி ரூபாயை வசூலித்து மாஸ் காட்டுவதாக பாக்ஸ் ஆபிஸ் (Annapoorani Box Office Collection) வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Latest Slideshows

Leave a Reply