Annapoorani Movie Review : அன்னபூரணி படத்தின் திரை விமர்சனம்

லட்சியம் மின்னும் கண்களுடன் கரண்டியைப் பிடித்து சமைத்து, குடும்பப் பின்னணியைத் தாண்டி அசைவ உணவு சமைப்பது, ருசிப்பது, தந்தையின் அங்கீகாரத்துக்காக ஏங்குவது என நயன்தாராவின் அன்னபூரணி படத்தின் விமர்சனத்தை (Annapoorani Movie Review) தற்போது காணலாம்.

Annapoorani Movie Review : தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாராவின் 75வது படமான ‘அன்னபூரணி’ இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என கலக்கி வரும் நயன்தாரா மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வந்து புதுமுக இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஜெய், சத்யராஜ், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், கார்த்திக் குமார், அச்யுத் குமார், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசைமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இப்படத்தில் ‘அன்னபூரணி’ ரசிகர்களை கவர்ந்தாரா என்பதை (Annapoorani Movie Review) பார்ப்போம்.

படத்தின் மையக்கருத்து :

அன்னபூரணி, உணவின் மீது நேசத்தை வளர்க்கும் குழந்தை மற்றும் பிறப்பிலிருந்தே சிறந்த சுவையை வேறுபடுத்தக்கூடிய மேம்பட்ட சுவை மொட்டுகளைக் கொண்டவர. ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சமையல் செய்யும் ‘ஆச்சாரா’ பிராமண குடும்பத்தில் பிறந்த அன்னபூரணியின் கனவு, தேசிய அளவில் போற்றப்படும் சமையல் கலைஞராக வேண்டும் என்பதுதான். மீனின் மணம் கூட வராத குடும்பத்தில் பிறந்த அன்னபூரணி, சமையல் கலைஞராக வருவதற்கு குடும்பப் பின்னணியும் அதன் கலாச்சாரமும் தடையாக இருக்கிறது.

ஒரு கட்டத்தில் தந்தையின் மகளான அன்னபூரணி, தனது லட்சியம் முக்கியம் என வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்து, தான் பார்த்து இன்ஸ்பயர் ஆகி வளர்ந்த செஃப் ஆனந்த் சுந்தரராஜனை (சத்யராஜ்) சந்திக்கிறார். தன் லட்சியத்திற்காக வீட்டைத் தாண்டி வந்த அன்னபூரணிக்கு வெளியுலகில் என்னென்ன தடைகள், அன்னபூரணியின் விருப்பத்தை அவரது குடும்பத்தினர் புரிந்து கொண்டார்களா, என்பதே படத்தின் மீதி கதையாகும்.

Annapoorani Movie Review :

படத்தில் நயன்தாராவுக்கு அடுத்தபடியாக அவரது தந்தையாக நடித்துள்ள அச்யுத் குமார் ஸ்கோர் செய்துள்ளர். தன் தலைமுறைக்குத் தேவையான முற்போக்குடன் மகளிடம் பாசத்தையும் ஒழுக்கத்தையும் காட்டும் தந்தையாக மிளிர்கிறார். இளம் நயன்தாராவாக அறிமுகமாகும் அன்னபூரணி, நயனைத் தாண்டி நம் மனதைத் திருடுகிறார். கதாநாயகிக்கு ஏற்ற கதையில் ஊறுகாய் போல் இருக்கிறார் நடிகர் ஜெய். நயன்தாராவுடனான காட்சிகள் ராஜா ராணியின் கெமிஸ்ட்ரியை நினைவுபடுத்துகிறது. கே.எஸ்.ரவிக்குமார், சத்யராஜ் கதாபாத்திரங்கள் கச்சிதமாகப் பொருந்துகின்றன. படத்தின் கட்டாயத்தில் வில்லனாக நடிக்க வேண்டிய கட்டாயத்தில் கார்த்திக் குமார், கதைக்குத் தேவையானதைச் செய்து வெறுப்பைப் பெறுகிறார்.

Annapoorani Movie Review : வழக்கமான டெம்ப்ளேட் ஹீரோயின் சார்ந்த கதைக்களத்தில், முதல் பாதி நிதானமாக பயணிக்க, இரண்டாம் பாதியில் திண்டாட வைக்கிறது. இரண்டாம் பாதியில் யூகிக்கக்கூடிய கதைக்களம், கார்த்திக் குமாரின் பழிவாங்கும் காட்சிகள், நாம் தொலைக்காட்சிகளில் பார்த்து பழகிய குக்கு வித் கோமாளி, மாஸ்டர் செஃப் வகையிலான  சமையல் போட்டி காட்சிகள் என நம்மை சோர்வடைய வைக்கிறது. ஆனால் நயன்தாரா பெண்களை மையமாகக் கொண்ட கதைக்களத்தில் தடைகளைத் தாண்டி ஜொலிப்பதைப் பார்த்து ரசிக்க விரும்புபவர்கள் குடும்பத்துடன் சென்று ரசிக்கலாம்.

Latest Slideshows

Leave a Reply