Anniyan Movie Re-Release In 4k Quality : 4k தரத்தில் ரீ-ரிலீசாகும் அந்நியன்
Anniyan Movie Re-Release In 4k Quality :
Anniyan Movie Re-Release In 4k Quality : இயக்குனர் ஷங்கர் படைப்பில், 2005 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான “அந்நியன்” திரைப்படம் 4k தரத்தில் ரீமேக் செய்து மறு வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது.
விக்ரம், நாசர், விவேக், பிரகாஷ் ராஜ், சதா, நெடுமுடி வேணு, கலாபவன் மணி, சார்லி மற்றும் பலர் நடிப்பில் கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியான படம் அந்நியன். ஷங்கர் இயக்கத்தில் இந்தப் படம் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான இப்படம் பின்னர் ஹிந்தி மற்றும் பிரெஞ்சு மொழிகளில் வெளியானது. பிரான்சில் வெளியான முதல் தமிழ்த் திரைப்படம் என்ற பெருமையும் அந்நியனுக்கு உண்டு.
ஷங்கர் இயக்கத்தில் தொடர்ந்து நடித்த அந்நியன், ஐ போன்ற படங்கள் விக்ரமுக்கு பெரிய நற்பெயரை பெற்றுத்தந்த படங்களில் முக்கியமானவை ஆகும். அந்த வகையில் அவரது அந்நியன் திரைப்படம் 18 வருடங்களை நிறைவு செய்துள்ளது. ரசிகர்களுக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்துள்ளது. மூன்று தோற்றங்களில் நடித்திருந்த விக்ரம் தனது சிறப்பான நடிப்பை வழங்கி ரசிகர்களை கவர்ந்தார். இந்த படத்திற்கு இசையமைத்த ஏ.ஆர்.ரகுமானின் பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் இந்த திரைப்படத்தை 4K தரத்தில் மீண்டும் வெளியிட இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படம் தீபாவளிக்கு பிறகு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய காலகட்டத்தில் மறு வெளியீடுகளைக் (Anniyan Movie Re-Release In 4k Quality) கொண்டாடுவது ட்ரெண்டாகி வருகிறது. இப்படத்திற்கு ஏற்கனவே ரசிகர்கள் பட்டாளம் இருக்கும் நிலையில், படம் மீண்டும் வெளியாகியுள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Latest Slideshows
-
Access Land Details In Without Documents : இனி எந்த ஆவணம் இல்லாமல் நிலத்தின் விவரம் அறிய புதிய திட்டம் அறிமுகம்
-
Health Benefits Of Eating Rose Petals : ரோஜாப்பூவின் மருத்துவ நன்மைகள்
-
Ku.Azhagirisaami Kadhaigal : கு.அழகிரிசாமி கதைகள்
-
Future Plans Of Namma Family Group : நம்ம பேமிலி Group-ன் நேற்றும், இன்றும், நாளையும் தொடரும் வெற்றிப் பயணம்
-
Indian Under 19 Team Captain Ayush Mathre : இந்திய அண்டர் 19 அணியின் கேப்டனாக ஆயுஷ் மாத்ரே அறிவிக்கப்பட்டுள்ளார்
-
Butterfly Life Cycle : பட்டாம்பூச்சியின் வாழ்க்கைச் சுழற்சி பற்றிய தகவல்கள்
-
Realme GT 7T Smartphone Launch On May 27 : ரியல்மி நிறுவனம் புதிய Realme GT 7T ஸ்மார்ட்போனை வரும் மே 27-ம் தேதி அறிமுகம் செய்கிறது
-
First Hindu Women AC Of Balochistan : பலுசிஸ்தானின் முதல் இந்து பெண் உதவி ஆணையராக காஷிஷ் சவுத்ரி பதவியேற்பு
-
Google Cloud India : இந்தியா உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் சந்தைகளில் ஒன்று
-
Thug Life Trailer : கமல்ஹாசன் நடிக்கும் தக் லைஃப் படத்தின் ட்ரெய்லர் வெளியீடு