Ant-Man and The Wasp: Quantumania (2023) ரிலீஸ் தேதி

Ant-Man and The Wasp: Quantumania திரைப்படமானது வருகின்ற பிப்ரவரி 17, 2023 அன்று திரையரங்கில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படம் ஒரு அமெரிக்க நாட்டு நாயகன் திரைப்படமாகும். மார்வெல் வரைக்கதை கதாபாத்திரங்களான ஸ்காட் லாங்/ ஆண்ட் மேன் மற்றும் ஹோப் வான் டெய்ன் வாஸ்ப் இவற்றை மையமாகக்கொண்டு எடுக்கப்படும் திரைப்படமாகும். இந்த படத்தை மார்வெல் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தயாரிக்க வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் விநியோகம் செய்கிறது.

இந்த திரைப்படத்திற்கு ஜெஃப் லவ்னஸ் என்பவர் கதை எழுத பெய்டன் ரீட் என்பவர் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் பால் ரூத், இவாஞ்சலீன் லில்லி, மைக்கேல் பெனா, கேத்ரின் நியூட்டன், மிச்செல் பைபர், மைக்கேல் டக்ளஸ் மற்றும் ஜொனாதன் மேஜர்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் 2015 ல் வெளியான ஆண்ட் மேன் மற்றும் 2018 இல் வெளியான ஆண்ட் மேன் அண்ட் த வாஸ்ப் போன்ற திரைப்படத்தின் தொடர்ச்சியாகும். ஆன்ட மேன் திரைப்படமானது 519 மில்லியன் டாலர்களை பெற்றுள்ளது.

Read: Spider Man: Across the Spider Verse

ஆண்ட் மேன் அண்ட் த வாஸ்ப் படமானது 622 மில்லியன் டாலர்களை திரட்டி சிறந்த விமர்சனங்களை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து முன்றாவது திரைப்படமானது இந்த இரண்டு திரைப்படங்களை விட அதிகமான எதிர்பார்ப்பை கொண்டிருக்கும். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பானது பிப்ரவரி 2021 இல் துருக்கியில் நடைபெற்றது. இந்த படத்தின் தலைப்பு மற்றும் புதிய நடிகர்கள் பற்றிய தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்ட் மேன் அண்ட் த வாஸ்ப் குவாண்டுமேனியா திரைப்படம் மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் நான்காம் கட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த படமானது பிப்ரவரி 17, 2023 அன்று திரையரங்கில் வெளியாக உள்ளது.

Leave a Reply

Latest Slideshows