Apache Helicopter : 2024 ஆண்டு பிப்ரவரியில் ராணுவத்தில் இணையும் அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள்

2024 ஆண்டு பிப்ரவரியில் இந்திய ராணுவத்தில் அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் (Apache Helicopter) இணைக்கப்பட உள்ளன. அமெரிக்காவின் விமான தயாரிப்பு நிறுவனமான போயிங்கின் அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் (Apache Helicopter) அமெரிக்க ராணுவத்தில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. அமெரிக்காவின் நட்பு நாடுகளான பிரிட்டன், இஸ்ரேல் உட்பட 18 நாடுகளின் ராணுவத்தில் இந்த அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் (Apache Helicopter) தற்போது பயன்பாட்டில் உள்ளன.

அப்பாச்சி ரக ஹெலிகாப்டர் (Apache Helicopter) சிறப்பம்சம் :

இந்த Apache Helicopter மணிக்கு 289 KM வேகத்தில் பறக்கக்கூடியது. மிக மோசமான வானிலையிலும் ஹெலிகாப்டரை இயக்க முடியும். அதிகபட்சமாக 2,800 அடி உயரம் வரை பறக்கும் திறன் கொண்டது. ஒரு நிமிடத்தில் 128 இலக்குகளை குறிவைத்து தாக்கும் அளவுக்கு  திறன் கொண்டது. இந்த Apache Helicopter மூலம் எதிரிகளின் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ட்ரோன்களையும் தரை இலக்குகளையும் மிகதுல்லியமாக தாக்கி அழிக்க முடியும்.

கடந்த 2015-ம் ஆண்டில் இந்திய விமானப் படைக்காக 22 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் வாங்க மத்திய அரசும் அமெரிக்க விமான தயாரிப்பு நிறுவனமான போயிங்யிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த 22 அப்பாச்சி ஹெலிகாப்டர்களும் தயாரிக்கப்பட்டு இந்திய விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. இவை தற்போது விமானப்படையில் சிறப்பாக சேவையாற்றி வருகின்றன. இதைத் தொடர்ந்து இந்திய ராணுவத்துக்காக ரூ.5,691 கோடி செலவில்  6 அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களை வாங்க கடந்த 2020-ம் ஆண்டில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.  அமெரிக்காவின் அரிசோனா மாகாணம், மெசா பகுதியில் உள்ள போயிங் ஆலையில் இந்திய ராணுவத்துக்காக அப்பாச்சி ஹெலிகாப்டர்களை தயாரிக்கும் பணியானது  முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

2024 ஆண்டு பிப்ரவரி முதல் ஜூன் மாதத்துக்குள் 6 அப்பாச்சி ஹெலிகாப்டர்களும் இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளன. பறக்கும் பீரங்கிகள் என்றழைக்கப்படும் Apache Helicopter இணைக்கப்பட்ட பிறகு  இந்திய ராணுவத்தின் பலம் மேலும் பலமடங்கும் அதிகரிக்கும். இதுமட்டுமல்லாமல் மேலும் இந்திய விமானப்படை மற்றும் ராணுவத்துக்காக உள்நாட்டில் 156 ஹெலிகாப்டர்களை தயாரிக்க இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனமும் மத்திய அரசும்  ஒப்பந்தம் செய்ய உள்ளன. இவை சியாச்சின் மற்றும்  கிழக்கு லடாக் பகுதிகளில் நிலை நிறுத்தப்படும் என்று இந்திய ராணுவம்  தெரிவித்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply