Apartment Sales Increase By Chennai : 2025-ல் சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புகள் விற்பனை 25 சதவீதம் உயரும் என கணிக்கப்பட்டுள்ளது

நடப்பு ஆண்டில் சென்னை மாநகரத்தில் அடுக்குமாடி குடியிருப்பு விற்பனையானது 25 சதவீதம் வரை வளர்ச்சியடையும் (Apartment Sales Increase By Chennai) என்று இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான Confederation Of Real Estate Developers Association Of India (CREDAI) கணித்துள்ளது. மேலும் சென்னையில் புதிய அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்கள் 20 சதவீதம் வரை வளரும் என்றும் தெரிவித்துள்ளது.

சென்னை மாநகரம் வேகமாக வளர்ந்து வருகிறது

சென்னையில் இனி முக்கிய பகுதிகளில் குறைந்தது 50 முதல் 100 கோடிக்கு மேல் சொத்து வைத்திருப்பவர்கள் மட்டுமே வீடு கட்ட முடியும் என்கின்ற அளவிற்கு சென்னை நகரம் வேகமாக வளர்ந்து வருகிறது. ஏனெனில் சென்னை மாநகருக்குள் நிலத்தின் மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் (Apartment Sales Increase By Chennai) பல மடங்கு உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் சென்னையை சுற்றியுள்ள தாம்பரம், ஆவடி, செங்கல்பட்டு, எண்ணூர், மணலி போன்ற பகுதிகளிலும் நிலத்தின் மதிப்பு மிகப்பெரிய அளவில் உயர்ந்து வருகிறது.

அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகரித்து வருகிறது

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புகளின் எண்ணிக்கை தற்போது மிக வேகமாக அதிகரித்து வருகிறது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் 3 ஆண்டுகளாக முடங்கி இருந்த சென்னை ரியல் எஸ்டேட் தொழிலானது தற்போது மீண்டும் வேகமெடுத்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் வீட்டில் இருந்து வேலை செய்வதற்கு பெரும்பாலான நிறுவனங்கள் தற்போது கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. தினமும் அலுவலகத்திற்கு வரவேண்டும் என ஐடி நிறுவனங்கள் உத்தரவிட்ட பிறகு சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புகள் நிலைமை அடியோடு மாறிவிட்டது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் 12 ஆயிரம் என்ற குறைந்த வாடகையில் அடுக்குமாடி வீடுகள் இருந்தது. ஆனால் தற்போது வீடே கிடைப்பது இல்லை என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. மேலும் சென்னை முழுவதும் வீட்டு வாடகை 20 சதவீதம் வரை கணிசமாக (Apartment Sales Increase By Chennai) உயர்ந்துள்ளது. மேலும் சென்னையில் புதிதாக பல்வேறு ஐடி நிறுவனங்கள், கார்ப்ரேட் நிறுவனங்கள் வருவதால் அடுக்குமாடி திட்டங்களின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது.

CREDAI கணிப்பு (Apartment Sales Increase By Chennai)

இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான (CREDAI) 2025-ம் ஆண்டில் சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புகள் 25 சதவீதம் வளர்ச்சியடையும் என்று (Apartment Sales Increase By Chennai) கணித்திருக்கிறது. அதாவது 2025-ம் நிதியாண்டின் 4-வது காலாண்டில் அடுக்குமாடி குடியிருப்புகளின் வளர்ச்சியானது 15 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை அதிகரிக்கும் என கணித்துள்ளது. மேலும் தற்போது அடுக்குமாடி குடியிருப்புகளின் தேவை காரணமாக 2025-ல் 20 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை விற்பனை அதிகரிக்கும் என்றும் கிரடாய் தெரிவித்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply