API Chat GPT: ஆன்லைன் வர்த்தகத்திற்கு விரைவில் புதிய புரட்சி… Chat GPT யை அறிமுகப்படுத்த போகும் API

Chat GPT  இப்போது புதிய ஏபிஐ (API) ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது. இது இணைய வழி பயன்பாட்டை முற்றிலும் மாற்றி அமைக்கும் வகையில் இருக்கும். குறிப்பாக தொழில்துறையினருக்கு இது ஒரு வரபிரசாதமாக இருக்கப்போகிறது.  

Chat GPT வருகை டெக்னாலஜி உலகில் புதிய பரிமாணத்தை கொடுத்துள்ளது. தகவல்தொடர்பு சேவை தேடலை தனது  கூகுளை சர்ச் ஐ பயன்படுத்தி வந்த பயனாளர்கள் இப்போது chat  GPT யை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இதுவே சாட்ஜிபிடியின் மிகப்பெரு வெற்றியாக பார்க்கப்படுகிறது. அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு சில வாரங்களிலேயே 100 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை பெற்றது chat GPT . இது இப்போது புழக்கத்துக்கு வரவில்லை என்றாலும், சாட்ஜிபிடியை விட மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் அமைக்கப்பட்டு வருகிறது.

ஆனால், இது குறித்து சாட்ஜிபிடி சிந்திப்பதாக இல்லை. தாங்கள் குறித்த வழியில் அடுத்து வரும் இலக்குகளை நோக்கி மின்னல் வேகத்தில் முன்னேறிக் கொண்டே செல்கிறது. பயனாளர்களிடம் இருந்து பெற்ற தரவுகளின் அடிப்படையில் புதிய அம்சங்களை மேம்படுத்திக் கொண்டிருக்கும் சாட்ஜிபிடி இப்போது API ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது. இதனை பல வகையான பயனாளர்கள் தங்கள் தொழில்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். 

இதைப் பயன்படுத்தி, வணிகங்கள் தங்கள் APPS, இணையதளங்கள், தயாரிப்புகள் மற்றும் சேவைகளில் Chat GPT தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடியும். அதாவது, பயனர்கள் எந்த இணையதளத்திலும் API மூலம் Chat GPT தொழில்நுட்பத்தைச் சேர்க்கலாம். இதன்மூலம் தங்கள் வணிகத்துக்கு தேவையான உதவிகளையும், மேம்படுத்தப்படக்கூடிய அம்சங்களையும் தெரிந்து கொண்டு உடனுக்குடன் அதனை முழுமையாக நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

API எப்படி பயன்படுகிறது?

அதாவது நீங்கள் ஏதேனும் E COMMERCE  தளத்துக் செல்கிறீர்கள். அந்த தளத்துடன் API  இணைக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் ஷாப்பிங் தொடர்பான பல்வேறு கேள்விகளை முன்வைக்கலாம். நிறைகள் மற்றும் குறைகள் அல்லது பொருட்களை வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான ஆலோசனைகள், டிரெண்டிங் மாடல்ஸ், ஒரு பிராண்டின் புதிய அப்டேட்டுகள், வர இருக்கும் அப்டேட்டுகள் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் chat GPT உதவியுடன் விற்பனையாளர்கள் கொடுக்க முடியும். அந்த தளத்துக்கு வரும் பயனாளர்களும் அதனை எளிமையாக தெரிந்து கொள்ளலாம்.

ஒரு பொருளின் செய்முறை, அதனை பிராண்டு செய்யும் யுக்தி ஆகியவற்றையும் chat GPT  துல்லியமாக உங்களுக்கு சொல்லிக் கொடுக்கும். இதுதவிர இன்னும் சில அம்சங்களும் இதில் இருக்கின்றன. இதனால், ஆன்லைன் வணிகத்தில் புதிய புரட்சி விரைவில் எழப்போகிறது என்கின்றனர் டெக்னாலஜி நிபுணர்கள்.

ChatGPT-க்கு மூளையாக இருந்தவர்

chat GPT யை  உருவாக்கியவர் சாம் ஆல்ட்மேன். சாம் ஆல்ட்மேன் Open AI-ன் CEO ஆவார். இவருடைய முழு பெயர் சாம் ஆல்ட்மேன் செயின்ட் லூயிஸ். மிசோரியில் வளர்ந்தார். சிறுவயதிலேயே மேகிண்டோஷின் நிரலாக்கத்திலும் அவர் சிறந்து விளங்கினார். சாம் ஆல்ட்மேன் ஓரின சேர்க்கையாளர்.

Latest Slideshows

Leave a Reply